இந்து மதத்தில் மகாளயபட்சம் என்னும் பித்ரு பக்ஷம் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமைத் தொடங்கி அமாவாசை வரை, 14 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த ஆண்டின் மகாளய பட்சம் காலம் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த வருடம் புரட்டாசி மாதம் 8ம் தேதி, அதாவது செப்டெம்பர் 25ம் தேதி ஞாயிறு அன்று மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் ஆகியோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பித்ரு பக்ஷத்தின் இந்த 15 நாட்களிலும், நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து, தங்கள் சந்ததியினருடன் தங்கி, உணவு அருந்துகின்றனர் என நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவரது ஆன்மா திருப்திக்காக, இந்த நாட்களில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்தல் மற்றும் தானம் செய்தல் அவசியமாகும் கூறப்பட்டுள்ளது. முன்னோர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். முன்னோர்களின் ஆசி, வாழ்க்கையில் வெற்றிகளையும் செல்வத்தையும் தேடித் தரும். நமது சந்ததியினர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள். மகாளபட்ச காலத்தில் என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


அன்னதானம் - மகாளயபட்ச காலத்தில் அன்னதானம் செய்வது சிறந்த தானமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில், ஏழை, எளியோர் மற்றும் பிராமணர்களுக்கு அன்ன தானம் செய்யலாம். இதன் காரணமாக சந்ததிகளின் வாழ்க்கையில் இருக்கும் தடைகள், துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.


மேலும் படிக்க | மகாளய பட்சம் 2022: முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்க செய்ய வேண்டியவை!


ஆடை தானம் - பித்ரு பக்ஷத்தில் ஏழை, எளியோர் மற்றும் பிராமணர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. உணவுடன் ஆடைகளையும் தானம் செய்ய வேண்டும். வேட்டி, துண்டு போன்றவற்றை பிராமணருக்கு தானமாக கொடுக்கப்படுகின்றன. இந்த நாட்களில் முன்னோர்கள், தங்கள் சந்ததியினரிடம் இருந்து, ஆடைகளை பெற்று அணிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று நம்பப்படுகிறது.


நெய் தானம் - பித்ரு பக்ஷத்தில், சுத்தமான பசுவின் சுத்தமான நெய் தானமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் குடும்ப பிரச்சனைகள் நீங்கி முன்னோர்களின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும். எனவே, இந்த காலத்தில் நெய் தானம் செய்வது நல்லது.


தங்கம் மற்றும் வெள்ளி தானம் - மகாளயபட்ச காலத்தில், தங்க பொருட்களை தானம் செய்வதன் மூலம், தானம் செய்பவர் சந்தித்து வரும் குரு தோஷம், அல்லது குரு கிரகத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், எல்லா நோய்களிலிருந்தும் விடுபட்டு நிம்மதியான வாழ்வு கிடைக்கும். அதே நேரத்தில், வெள்ளி சந்திரனை குறிப்பதாக கருதப்படுகிறது. எனவே, இந்நாட்களில் வெள்ளியை தானம் செய்வதால் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை நிலவும்.


எள் - மகாளய பட்ச காலத்தில் கருப்பு எள் தானம் தானம் செய்வதன் மூலம், ஒரு நபர் அனைத்து தடைகளிலிருந்தும் விடுதலை பெறுகிறார். இதுமட்டுமின்றி கிரகங்கள் மற்றும் ராசிகளால் ஏற்படும் தடைகள் விலகும். மேலும், நெருக்கடிகள் நீங்கும்.


உப்பு தானம் - பித்ரு பக்ஷத்தின் போது உப்பு தானம் செய்வது எதிர்மறை சக்தியிலிருந்து விடுதலை அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்நாட்களில் உப்பை தானம் செய்வதால், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.


முன்னோர்களின் திருப்திக்காக, பித்ரு பக்ஷத்தின் போது ஏழை மற்றும் ஏழைகளுக்கு காலணிகள் மற்றும் செருப்புகளை தானமாக வழங்குவது மிகவும் சிறந்தது என்று நம்பப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிலைத்திருக்கும், அத்துடன் சனி மற்றும் ராகுவின் தோஷங்களும் நீங்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ