சீதளா அஷ்டமி 2023: இந்து மதத்தில், பங்குனி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் சப்தமி மற்றும் அஷ்டமி திதியில் சீதள மாதா வழிபடப்படுகிறார். இந்நாளில் சீதள மாதாவை வழிபடுவது ஆரோக்கிய வரம் தரும். கடுமையான நோய்களிலிருந்து விடுபடுங்கள். 'சீதளம்' என்றால் வெப்பத்தை தனிக்கும் குளிர்ச்சி. பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி சீதளா அஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது. காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள். மேலும், சீதள அஷ்டமி நாளில் அனைவரும் பழைய மற்றும் குளிர்ந்த உணவை உண்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதளா சப்தமி மற்றும் அஷ்டமி திதி பூஜை முஹூர்த்தம்


கிருஷ்ண பக்ஷத்தின் சப்தமி திதி, அதாவது சீதளா சப்தமி திதி மார்ச் 13, 2023 அன்று இரவு 9.27 மணிக்கு தொடங்கி மார்ச் 14, 2023 அன்று இரவு 8.22 மணிக்கு முடிவடையும். உதயதிதியின் படி, சீதளா சப்தமி மார்ச் 14 அன்று கொண்டாடப்படும். இந்த நாளில் சீதளா மாதாவை வழிபடும் நேரம் காலை 06.31 மணி முதல் மாலை 06.29 மணி வரை இருக்கும்.


இந்து நாட்காட்டியின்படி,  கிருஷ்ண பக்ஷத்தின் சீதளா அஷ்டமி மார்ச் 14, 2023 அன்று இரவு 08.22 மணிக்கு தொடங்கி மார்ச் 15, 2023 அன்று மாலை 06.45 மணிக்கு முடிவடையும். இந்த வழியில், உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் சீதளா அஷ்டமி மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மார்ச் 15 ஆம் தேதி காலை 06.30 மணி முதல் மாலை 06.29 மணி வரை சீதளா மாதாவை வழிபடுவதற்கு உகந்த நேரம்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


சீதளா அஷ்டமியில் விரதம் இருக்கும் ஒரு பெண்ணின் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். இதனுடன், இந்த நாளில் சீதளா மாதாவுக்கு பழைய உணவு வழங்கப்படுகிறது, அதன் பிறகு கோடை காலம் தொடங்கும் மற்றும் இந்த நேரத்தில் புதிய உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். இந்த வகையில் இந்த சீசனில் பழைய உணவுகளை உண்ண இதுவே கடைசி நாளாகும்.


ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் சோமாவதி அமாவாசை! விரதம் அனுஷ்டிக்கும் முறை!


சீதளாஷ்டகம்' என்ற ஸ்லோகம் ஸ்காந்த புராணத்திலுள்ளது. பொதுவாக வெப்பம், சூடு அதிகமாகி அதன் காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, உடலும் மனமும் குளிர்சியடைய சீதளா தேவியின் அருளை வேண்டிச் சொல்லக்கூடிய துதி இது. விஸ்போடனம் என்று சொல்லக் கூடிய வெடிவிபத்துகள், குண்டு வெடிப்புகள் ஆகியவை நிகழாமல், விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த ச்லோகம் மிகவும் சிறந்தது.


ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினிதேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை.


எனவே, சிவபெருமானை சரண் அடைந்து, தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.
பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார்.
அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது, 'சீதளாயை நமஹ' என்று வருகிறது.


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ