கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் பொது இடங்களிலும், தங்களது வீடுகளிலும் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை புலியகுளம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்ட, ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய மூலவர் முந்தி விநாயகர் சிலை அமைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விநாயக சதுர்தியை  முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். காலை முதலே கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் விநாயகரை வழிபட குவிந்து வருகின்றனர்.



அதேபோல ஈச்சனாரி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலிலும் அதிகாலை மழை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி 2022: விக்னங்களை போக்கும் விநாயகர், கேட்ட வரம் தரும் கணபதி!!


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல்துறையினர் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலையை கரைக்கும் நாளன்று 1600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.


முழுமுதற் கடவுள்


முழு முதற் கடவுள், விக்னங்களை தீர்க்கும் விநாயகர் பக்தர்களின் வினை தீர்க்கும் கடவுளாக அருள் புரிகிறார். அனைத்து வித பூஜைகளிலும் வழிபாடுகளிலும் விநாயகருக்கே முதலிடம். விநாயகர், பிள்ளையார், கணபதி என பல்வேறு திருநாமங்களால் வழிபடப்படும் விநாயகப் பெருமான் பக்தர்களின் குறை தீர்ப்பதில் குபேரனாக விளங்குபவர். விநாயகர், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் அவதரித்தார். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாக மிக விமரிசையாக கொண்டாடப்படுகின்ற்து.


நம் நாட்டில் விநாயகருக்கு பல கோயில்கள் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில், கிட்டத்தட்ட அனைத்து தெருக்களிலும் ஒரு குட்டி பிள்ளையார் கோயிலை காணலாம். மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த தெய்வங்களில் விநாயகருக்கே முதலிடம்!!


மேலும் படிக்க | Ganesh Chaturthi: கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு; இது விநாயகரின் சதுர்த்தி திருநாள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ