தந்தேரஸ் 2024: வடமாநிலங்களில் தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஐந்து நாள் கொண்டாட்டத்தின் துவக்கம் தந்தேராஸ் உடன் துவங்குகிறது. செல்வத்துக்கு அதிபதி என்று அறியப்படும் அன்னை மகாலட்சுமியின் பிறந்தநாளான  தந்தேராஸ் திருநாள் இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது.  தீபத் திருநாளாக கொண்டாடப்படும் தீபாவளிக்கு முதல் நாள் செல்வங்களை அள்ளித் தரும் அன்னை மகாலட்சுமியின் பிறந்த நாள், தந்தேராஸ் தினமாக கொண்டாடப்படுகின்றது.  இந்த ஆண்டு தந்தேராஸ் திருவிழா அக்டோபர் 29 அன்று கொண்டாடப்படுகிறது. தந்தேராஸ் திருவிழா செல்வம், செழிப்பு மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித் தரக் கூடியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்சய திருதியை போலவே முக்கியத்துவம் கொண்ட தந்தேரஸ் நாளில்  தங்கம் வாங்குவது மற்றும் நகை வாங்குவது அதிர்ஷ்டகரமாக கருதப்படுகிறது. எனவே, தீபாவளியின் (Diwali 2024) தொடக்க நாளான தந்தேராஸ்  நாளில் மக்கள் தங்கம், தங்க நாணயங்கள் மற்றும் உலோகங்கள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்களை வாங்குகிறார்கள். தந்தேரஸ் தினத்தன்று, இவற்றை வாங்கினால் வீட்டில் செல்வச் செழிப்பும், வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. 


இயல்பாகவே தங்கம் வெள்ளி மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு தீய ஆற்றலை எதிர்த்து, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் குணம் கொண்டது. எனவே, எதிர்மறை தாக்கத்தில் இருந்து ஒருவரை பாதுகாக்கிறது. அதோடு, தந்தேரஸ் நன்னாளில் லட்சுமி தேவி, விநாயகர், குபேர் மற்றும் தன்வந்திரி ஆகியோரை பூஜித்தால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.


தந்தேரஸ் அன்று குபேர் தேவரை வழிபடும் முறை


குபேர பூஜை செய்தால் வீட்டில் இருக்கும் பணக் கஷ்டம் அனைத்தும் நீங்கும். வேலை தொழில் விருத்தியாகும். செல்வம் பெற, குபேரரை வழிபடுவதற்கு தண்டேராஸ் நாள் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில், காலையில் வீட்டை சுத்தம் செய்த பிறகு, வழிபாட்டு இடத்தில் குபேர தேவரின் படம் அல்லது  சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்து பூஜிக்கவும். முழு பக்தியுடன் மந்திரங்களை உச்சரித்து குபேரரை தியானிக்க வேண்டும். "ஓம் குபேராய நம" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். பக்தி சிரத்தையுடன் பூஜை செய்தால் செல்வ செழிப்பிற்கு குறைவே இருக்காது. இந்த நாளில் பூஜை முடித்து ஏழைகளுக்குத் தேவையான உடை, உணவு ஆகியவற்றை தானம் செய்தால், சகல தோஷங்களும் விலகிப் புண்ணிய பலன்கள் பெருகும்.வீட்டில் எப்போதும் ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும்.


மேலும் படிக்க | இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு


 2024  தந்தேரஸ் நல்ல நேரம்


ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷத்தின் திரயோதசி திதி அக்டோபர் 29 காலை 10.31 மணி  தொடங்குகிறது.


ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷத்தின் திரயோதசி திதி அக்டோபர் 30 மதியம் 1:15 மணிக்கு நிறைவடைகிறது.


உதயதிதியின்படி தந்தேராஸ் நாள் - 29 அக்டோபர் 2024


தந்தேரஸ் பூஜை முஹூர்த்தம் - அக்டோபர் 29 மாலை 6.31 முதல் 8.13 வரை


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | துர்மரணத்தைத் தவிர்க்க எமனுக்கு மாவிளக்கு! தந்தேரஸ் நாளில் எம தீபம் ஏற்றினால் மரணபயம் இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ