துர்மரணத்தைத் தவிர்க்க எமனுக்கு மாவிளக்கு! தந்தேரஸ் நாளில் எம தீபம் ஏற்றினால் மரணபயம் இல்லை!

Yama Deepam On Dhanteras Day : தீபாவளியின் தொடக்க நாளான தந்தேரஸ் தினத்தில், யம தீபம் ஏற்றுவது வழக்கம். தந்தேராஸ் நாளில், லட்சுமி தேவி, விநாயகர், குபேரர், தன்வந்திரி ஆகியோருடன் எமராஜரையும் வழிபடும் பாரம்பரியம் உள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2024, 01:27 PM IST
  • தந்தேரஸ் நாளில் எமனுக்கு மாவிளக்கு!
  • அகால மரணத்தை தவிர்க்க எமனிடம் விண்ணப்பம்
  • லட்சுமி குபேர பூஜை
துர்மரணத்தைத் தவிர்க்க எமனுக்கு மாவிளக்கு! தந்தேரஸ் நாளில் எம தீபம் ஏற்றினால் மரணபயம் இல்லை! title=

இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. தீபங்களை வரிசையாக ஏற்றி கொண்டாடும் தீபாவளி பண்டிகை, ஐந்து நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இந்து மத நம்பிக்கைகளின்படி, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதியன்று தந்தேரஸ் எனப்படும் தன விருத்தி நாள் வருகிறது. இன்று செய்யும் பூஜைகள் குடும்பத்தில் செல்வ செழிப்பைக் கொண்டு வந்து சேர்க்கும். தீபாவளியின் தொடக்க நாளான தந்தேரஸ் தினத்தில், யம தீபம் ஏற்றுவது வழக்கம். தந்தேராஸ் நாளில், லட்சுமி தேவி, விநாயகர், குபேரர், தன்வந்திரி ஆகியோருடன் எமராஜரையும் வழிபடும் பாரம்பரியம் உள்ளது. 

யம தீபம் 

தந்தேராஸ் நாளில், மாவில் விளக்கு செய்து அதில் எண்ணெயும் திரியும் இட்டு, தெற்கு திசையில் விளக்கேற்றுவது வழக்கம். இந்த யம தீபத்தை ஏற்றி எமதர்மரை மகிழ்ச்சி செய்த பிறகு தான் தீபாவளி தொடங்குகிறது. ஐப்பசி மாதம் தேய்பிறை திரயோதசி திதியில் யம தீபம் ஏற்றப்படும்.  

தந்தேரஸ் நாள், லட்சுமி தேவி உள்ளிட்ட பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்களுடன் தொடர்புடையது. பக்தர்கள் அவர்களை மிகுந்த பக்தியுடன் வணங்குகிறார்கள். இந்த புனித நாளில் வழிபடப்படும் கடவுளில் யமனும் ஒருவர், மாலையில் பிரதோஷ காலத்தில் நான்கு முகம் கொண்ட தீபத்தை ஏற்றி வணங்க வேண்டும்.

மேலும் படிக்க | இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு

மரண பயம் அகற்றும் எம தீபம்

தந்தேராஸ் நாளன்று தெற்கு திசையில் தீபம் ஏற்றுவதால், அந்த வீட்டில் வசிப்பவர்களை யம பகவான் பாதுகாத்து, நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுப்பார் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்ல, இந்த எம தீபம் ஏற்றும் வழக்கம், குடும்பத்தில் அகால மரணம் ஏற்படுவதைத் தடுக்கும், மேலும் இந்த விளக்கை வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டும். மரணத்தின் அதிபதியான யமனை வணங்கும் ஒரே நாள் தனத்ரயோதசி என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்கும் நாள்

தந்தேராஸ் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி  உள்ளிட்ட சில பொருட்களை வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. தந்தேரஸ் நாளில், பிரதோஷ காலத்தில் யாம் தீபம் ஏற்றுவதும், ஷாப்பிங் செய்வதும், தீப தானம் செய்வதும் நல்லது. இந்த ஆண்டு தந்தேராஸ் பூஜைக்கு உகந்த நேரம்: மாலை 5.38 மணி முதல் இரவு 8.13 மணி வரை ஆகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தந்தேரஸ் பண்டிகையில் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம்! தீபாவளியை குஷியாக கொண்டாடும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News