தீபாவளி 2022 எப்போது: இன்று முதல் பண்டிகை சீசன் தொடங்கிவிட்டது. அதன்படி இன்று நவராத்திரி தொடங்கிவிட்டது, விஜயதசமி அக்டோபர் 5 ஆம் தேதியும், அதன் பிறகு அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளியும் கொண்டாடப்படும். 2 நாட்களுக்குப் பிறகு, ஒரு முக்கியமான கிரகப் பெயர்ச்சியும் நடக்கப் போகிறது. அதன்படி அக்டோபர் 26 ஆம் தேதி 2022 அன்று, புதன் கிரகம் பெயர்ந்து துலாம் ராசிக்குள் நுழைகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தருவதோடு, பல பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உதவும். இதனுடன், லட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும். எனவே தீபாவளிக்கு பிறகு புதனின் ராசி மாற்றம் எந்தெந்த நபர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களுக்கு தீபாவளிகக்கு பிறகு நன்மை உண்டாகும்


மிதுனம்: தீபாவளிக்கு பிறகு புதன் சஞ்சாரம் செய்வதால் மிதுன ராசிக்காரர்களின் பழைய பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பண வரவு சாதகமாக அமையும்.


மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் நன்மை தரும். அவர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். பணப்பற்றாக்குறையாக இருந்தவர்களின் நிதி தொல்லை முற்றிலும் நீங்கும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் ஆதாயமடைவார்கள். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். 


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் குடும்ப மகிழ்ச்சியைத் தரும். உறவுமுறைகள் நன்றாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். நீங்கள் எங்கிருந்தாவது பணம் பெறலாம். வேலையில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.


தனுசு: துலாம் ராசியில் புதன் நுழைவதால் தனுசு ராசிக்காரர்களின் பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பிடிபட்ட பணத்தைக் காணலாம். தடைப்பட்ட திட்டங்கள் இப்போது இயங்கும். உங்கள் பணி சிறப்பாக நடக்கும். பாராட்டு பெறுவீர்கள். 


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் தொழில் பலன்களைத் தரும். முன்னேற்றம் அடைய முடியும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். 


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ