மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில், நவராத்திரி கொண்டாட்டங்களின் போது நடந்த ஒரு விபத்து மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி (Navratri) கொண்டாட்டங்களின் ஒன்பது நாட்கள் முடிந்த பின்னர் துர்கை அம்மன் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வு நடப்பது வழக்கம். போபாலின் பஜாரியாவில் இந்த நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த ஒரு கார், அங்கு கூடியிருந்த மக்களின் மீது மோதியது. இதில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.
தகவல்களின்படி, பஜாரியா கிராசிங்கில் உள்ள ரயில் நிலையம் அருகே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடைப்பட்ட இரவில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஒரு கேமராவில் பதிவாகியிருந்ததால், இப்போது இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
துர்கை அம்மன் சிலை கரைப்பதற்காக கூடியிருந்த கூட்டத்திற்குள் ஒரு சாம்பல் நிற கார் மிக வேகமாக வந்து மோதுவதை அந்த வீடியோவில் (Video) காண முடிகிறது. அந்த காரில் இரண்டு-மூன்று பேர் இருந்ததாகத் தெரிகிறது.
#WATCH Two people were injured after a car rammed into people during Durga idol immersion procession in Bhopal's Bajaria police station area yesterday. Police said the car driver will be nabbed.#MadhyaPradesh pic.twitter.com/rEOBSbrkGW
— ANI (@ANI) October 17, 2021
ஊடக அறிக்கைகளின் படி, போலீசார் இந்த விபத்து குறித்த விசாரணயை தொடங்கியுள்ளனர். வாகனத்தின் எண்ணை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து வருகின்றனர்.
ALSO READ:Viral Video: பிபிஇ கிட் அணிந்து கர்பா நடனம், நவராத்திரி விழாவில் கோவிட் விழிப்புணர்வு
நவராத்திரி கொண்டாட்டங்களின் நிறைவு நாள் நிகழ்வில் ஏற்பட்ட இந்த விபத்து (Accident) மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவில் மக்கள் கூடியிருப்பதை நன்றாக அறிந்தும் காரை அதி வேகத்தில் செலுத்திய நபர்கள் மீது மக்கள் மிகுந்த கோவத்தில் உள்ளனர்.
காவல் துறை இந்த விபத்து குறித்த விசாரணையில் முழு முனைப்புடன் ஈடுபட்டு உள்ளது.
ALSO READ: நவராத்திரி விழாவில் விவசாயிகள் போராட்டத்தின் காட்சிகள்: வைரலாகும் விழா வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR