புதன் பரிவர்த்தனை 2022, ராசிகளில் தாக்கம்: ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் இயல்பான அல்லது பிற்போக்கு நகர்வின் மூலம் பெயர்ச்சியடைகின்றன. இந்த இயக்கத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் காணப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 2 ஆம் தேதி புதன் கிரகம் ராசி மாறி மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறது. புதனின் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளின் பிடியில் சிக்குவார்கள்.


ஜோதிட சாஸ்திரப்படி, புதன் கிரகம் ஜூலை 2, 2022 அன்று காலை 9:40 மணிக்குப் பெயர்ச்சியாகும். மிதுன ராசியை ஆளும் கிரகமான புதன் இந்த ராசியிலேயே பெயர்ச்சியாகவுள்ளது. ஆகையால், புதன் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக இருக்கும். புதனின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


கன்னி:


கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் இந்தப் பெயர்ச்சியின் போது தொழிலில் ஸ்திரத்தன்மை பெறுவதே முக்கிய குறிக்கோளாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். தொழிலில், வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் முடிவெடுக்கும் திறன் வளரும். சுயாதீனமாக முடிவுகளை எடுக்க முடியும்.


மேலும் படிக்க | கும்பத்திலிருந்து மகரம் செல்லும் சனி: இந்த 5 ராசிகளின் தலைவிதி மாறும் 


மகரம்:


நீண்ட நாட்களாக கடினமாக உழைத்து வரும் மகர ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பணியிடத்தில் பணி பாராட்டப்படும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மகர ராசியினருக்கு, இந்த பெயர்ச்சி பண ஆதாயங்களின் அடிப்படையில் பயனுள்ளதாக இருக்கும். பண வரவு சரியாக இருக்கும்.


அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். பண ஆதாயம் கைகூடும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த தொகை இப்போது கை வந்து சேரும்.


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு கிடைக்கும். அதுமட்டுமின்றி உங்கள் விருப்பத்தையும் நிறைவேற்றிக்கொள்ள அதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். இந்த காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்லவர்களின் தொழிலில் வளர்ச்சி இருக்கும். மேலும் இது தொடர்பான புதிய வாய்ப்புகளையும் பெறலாம். 


இந்த நேரத்தில் அதிக நம்பிக்கையுடன் முடிவுகளை எடுப்பீர்கள். புதனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண பலன்களை தரும். சிம்ம ராசிக்காரர்களுக்கு பணம் வருவதற்கான பல புதிய வழிகள் திறக்கும். 


 (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் தாக்கத்தால் இந்த ராசிகளுக்கு 3 ஆண்டுகள் அவஸ்தை காலம், எச்சரிக்கை தேவை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR