மாத ராசிபலன் செப்டம்பர் 2022: செப்டம்பர் மாதம் சிலருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். மாத ஜோதிட கணக்குகளின் படி, சில ராசிக்கார்ரகள் லட்சுமி தேவியின் அருளால் செப்டம்பரில் பணமும், புகழும் பதவி உயர்வும் பெறுவார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி உண்டாகும். இந்த மாதம் சில முக்கிய கிரகங்களும் இடம் மாறுகின்றன. இவற்றின் தாக்கமும் இந்த ராசிகளின் மீது அனுகூலமாக இருக்கும். செப்டம்பர் 2022-ன் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: 


மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் நம்பிக்கையின் பலத்தால் மிகப்பெரிய சவாலை சமாளிப்பார்கள். சிலருக்கு வேலையை மாற்றும் வாய்ப்பு வரும். இதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஒரு புதிய உறவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


ரிஷபம்: 


செப்டம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டாகும். நீங்கள் சில பயணங்களை மேற்கொள்ளலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.


மேலும் படிக்க | Planet Transits 2022: அடுத்த 120 நாட்கள் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம் தான்!


சிம்மம்: 


சிம்ம ராசிக்காரர்களுக்கு செப்டம்பரில் தொழில் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரிகளும் வெற்றி பெறுவார்கள். உங்கள் மனசாட்சியின் பலத்தால் நீங்கள் இழப்பிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள். குழந்தைகள் பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். முதலீடுகளின் மூலம் லாபம் உண்டாகும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.


கன்னி: 


கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பரில் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கலாம். டென்ஷன் குறைவாக இருக்கும். நிம்மதியாக உணர்வார்கள்.


துலாம்: 


துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். வேலை அழுத்தம் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். வலுவான பண ஆதாயம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.


மகரம்: 


மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பல வெற்றிகளைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வர்த்தகர்கள் தங்களின் துல்லியமான மதிப்பீட்டின் மூலம் லாபம் அடைவார்கள். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். குழப்பத்திலிருந்து விலகி இருங்கள். பண வரவு சாதகமாக இருக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இவற்றால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | செப்டம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை, உஷார்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ