சனி உதயம்  2023 ராசிபலன்: சனி பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெயர்ச்சியாகி பின் அஸ்தமனமானார். சூரியனின் பிரகாசத்தின் முன் அவரது செல்வாக்கு பலவீனமடைந்தது. எனினும், இப்போது மார்ச் 5 அன்று, சனி மீதான சூரியனின் தாக்கம் குறையும். இதன் காரணமாக அவர் மீண்டும் உதயமாவார். சனி பகவான் உதயமாவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு இது அபரிமிதமான நற்பலன்களை அளிக்கும். சிலருக்கு இனி எந்த வித தவறையும் செய்யாமல் முன்னேற்றப் பாதையில் செல்லும்படி எச்சரிக்கை செய்யும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.


மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், பதவி உயர்வு குறித்து மேலதிகாரியுடன் பேச வேண்டும். நிதி முன்னேற்றம் இருக்கும், மூத்த சகோதரரின் முன்னேற்றத்திற்கான கதவுகளும் திறக்கப்படும்.


ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் அலுவலகத்தில் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். போட்ட திட்டத்தில் கவனம் செலுத்தி சோம்பலை விட்டு கடுமையாக உழைக்க வேண்டி வரும். அப்போதுதான் வேலையை முடிக்க முடியும்.


மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கும். தொழிலதிபர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும். இதற்கு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும். இதனுடன், பூர்வீக சொத்துக்கள் பெருகவும் வாய்ப்பு உண்டாகும்.


கடகம்:
கடக ராசிக்காரர்கள் தங்கள் உடல்நிலை விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் சிறிய கவனக்குறைவும் ஒரு பிரச்சனையாக மாறும். ஏற்கனவே சில நோய்களின் பிடியில் இருப்பவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம், ஆகையால் உணவில் நார்ச்சத்து மற்றும் தானியங்களின் அளவை அதிகரிக்கவும். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள்.


சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் உடல்நலத்துடன், உங்கள் தாயின் ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் விஷயத்தில் இந்த பணியையும் தள்ளிப்போடுவது நல்லதல்ல. ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், தாயை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். தலையில் காயம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: சில ராசிகளுக்கு இன்று மகிழ்ச்சியான செய்தி வரும்! 


கன்னி:
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பை தளர விடாமல், நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் விளம்பரத்தை ஊக்குவிக்கவும், இது உங்கள் வியாபாரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் போட்டியாளர்களும் சிரமப்படுவார்கள்.


துலாம்:
துலாம் ராசி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சித் துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசியின் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இதனால் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.


விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் உடல்நலம் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், குறிப்பாக இதயம் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருந்து, மதுவிலக்கு ஆகியவற்றில் அலட்சியம் காட்ட வேண்டாம். அதிக எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் வாகனத்தை மாற்ற நினைத்தால், அதை இப்போது செய்யலாம்.


தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இதுவரை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள், ஆனால் இப்போது நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். திடீர் பயணமாக எங்காவது செல்ல நேரிடலாம், இதனால் பணச்செலவு ஏற்படும். குடும்பத்தில் உள்ள உங்கள் இளைய சகோதரரின் தேவைகளைப் பற்றி அவரிடம் கேட்டு அவற்றை நிறைவேற்றவும்.


மகரம்:
மகர ராசிக்காரர்கள் கடுமையான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். இதற்கு உங்கள் பேச்சில் கட்டுப்பாட்டை கொண்டு வாருங்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதுடன் சேமிப்பின் மூலம் டெபாசிட்டையும் அதிகரிக்க முடியும். பற்களை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள்.


கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் ஈகோவைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யாருடனும் சச்சரவுகளிலும் ஈடுபடாமல் கவனமாக இருக்க வேண்டும், யாருடைய சண்டையிலும் மத்தியஸ்தம் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வியாபாரிகள் திட்டமிட வேண்டும்.


மீனம்:
மீன ராசிக்காரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டால் வெற்றி கிடைக்கும். பாஸ்போர்ட் பெறுவது பற்றி யோசித்துக்கொண்டு இருப்பவர்கள் சனி உதயமானவுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம். விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 


மேலும் படிக்க | சகல பாவங்களையும் போக்கும் சனி மஹாபிரதோஷ விரதம்! கடைபிடிக்கும் முறை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ