குரு பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி யோகம்: 3 ராசிகளுக்கு உச்சக்கட்ட லாபம்

Guru Peyarchi 2023: குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் சுப யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும் என்றாலும், கஜலக்ஷ்மி யோகம் அமைவது 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2023, 02:23 PM IST
  • வியாழன் சஞ்சாரத்தால் உருவாகும் சந்திரன் - குரு சேர்க்கை கஜலக்ஷ்மி யோகத்தை உருவாக்கும்.
  • இது மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும்.
  • வேலை தேடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
குரு பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி யோகம்: 3 ராசிகளுக்கு உச்சக்கட்ட லாபம் title=

குரு பெயர்ச்சி, ஏப்ரல் 2023, ராசிகளில் அதன் தாக்கம்: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசி, இயக்கம் மற்றும் நிலைகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. சில ராசிகளுக்கு இவை சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன. இதனுடன் இந்த மாற்றங்களால் சுப மற்றும் அசுப யோகங்களும் ஏற்படுகின்றன. 

இம்முறை ஹோலிக்குப் பின் வரும் நேரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தேவகுரு வியாழன் ஹோலிக்குப் பிறகு 22 ஏப்ரல் 2023 அன்று தனது ராசியை மாற்றுகிறார். தற்போது வியாழன் மீன ராசியில் இருக்கிறார். ஏப்ரல் மாதம் அவர் பெயர்ச்சியாகி மேஷ ராசிக்குள் நுழைவார். அந்த நேரத்தில் சந்திரனும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது வியாழன் மற்றும் சந்திரனின் சேர்க்கை கஜலக்ஷ்மி யோகத்தை உண்டாக்கும். 

கஜலக்ஷ்மி யோகம் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தை நீக்குகிறது. இந்த சுப யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும் என்றாலும், கஜலக்ஷ்மி யோகம் அமைவது 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்களுக்கு, பண வரவு, மகிழ்ச்சி, செல்வச்செழிப்பு என அனைத்தும் கை கூடும். ஹோலிக்குப் பிறகு உருவாகும் இந்த கஜலக்ஷ்மி யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி யோகம் அபரிமிதமான பலன்களைத் தரும்

மேஷம்: 

வியாழன் சஞ்சாரத்தால் உருவாகும் சந்திரன் - குரு சேர்க்கை கஜலக்ஷ்மி யோகத்தை உருவாக்கும். இது மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். வேலை தேடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். உங்கள் பணி பாராட்டப்படும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால், அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். 

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சியினால் பங்குனியில் பட்டையை கிளப்பப் போகும் ராசி ‘இது’ தான்! 

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். வருமானத்தில் உயர்வு இருக்கும். வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். தனியாக இருப்பவர்களின் வாழ்க்கையில் துணையின் பிரவேசம் ஏற்படும்.

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி யோகம் திடீர் பண பலன்களைத் தரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வேலைக்கு ஏற்ற நேரமாக இது இருக்கும். உங்கள் பணியில் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் உண்டு. காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்கும் கனவு நிறைவேறும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதனின் அருளால் உருவான விபரீத ராஜயோகம்: 4 ராசிகளுக்கு பணக்கார யோகம், செல்வம் பெருகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News