ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் அனைத்து ராசி அறிகுறிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமும் மிகவும் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அனுகூலமாக இருக்கும். ஜூலை மாதத்தில் சில ராசிக்காரர்கள் மிகவும் பலன் அடைவார்கள். மேலும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் பல கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பலன் 12 ராசிக்காரர்களுக்கும் இருக்கும். எனினும் ஜூலை மாதம் குறிப்பாக பலனளிக்கப் போகும் சில ராசிகளைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.


ஜூலை 16 ஆம் தேதி, ஜூலை மாதத்தில், சூரியன் கடக ராசியில் நுழைகிறது. அதே நேரத்தில், புதனின் ராசியில் ஏற்படும் மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.  புதன் 68 நாட்கள் மிதுன ராசியில் இருப்பார். ஜூலை 13ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்த நேரத்தில், இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்


மேலும் படிக்க | ஆனி மாதத்தில் 5 பெயர்ச்சிகள்; பாதிப்பை நீக்கும் புதன் கிழமை பரிகாரங்கள்


மிதுனம்


ஜோதிட சாஸ்திரப்படி ஜூலை மாத தொடக்கத்தில் சூரிய பகவான் இந்த ராசியில் அமர்ந்திருக்கிறார். மேலும் ஜூலை 2ம் தேதி புதனும் இந்த ராசிக்குள் நுழைகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மறுபுறம், சுக்கிரனும் ஜூலை 13 ஆம் தேதி இந்த ராசிக்குள் நுழையப் போகிறார். எனவே மிதுன ராசிக்காரர்கள் ஜூலை மாதம் உச்ச பலனைப் பெறப் போகிறார்கள். வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன.


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு வரும் மாதம் சுப பலன்களைத் தரப் போகிறது. சூரியன் ஜூலை 16 முதல் கடக ராசியில் பிரவேசிக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடக ராசிக்காரர்களுக்கு மரியாதை கூடும். இத்துடன் செல்வ குபேரின் அருளும் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில், ஜூலை 28-ம் தேதி மாத இறுதியில், கடகத்தில் வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியும் இந்த ராசிக்கு சுப பலன்களைத் தரும்.


தனுசு


இந்த ராசிக்காரர்களுக்கும் வரும் மாதம் சிறப்பானதாக இருக்கப் போகிறது. ஜூலை மாதம் பல பெரிய கிரகங்கள் தங்கள் நிலை மாறி தனுசு ராசிக்குள் நுழையும். ஜூலை 16-ம் தேதி முதல் சூரியன் இந்த ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக வழியில் பண லாபம் உண்டாகும். மேலும், புதனின் தாக்கமும் இந்த ராசியில் தெளிவாகத் தெரியும்.


மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR