ஆனி மாதத்தில் 5 பெயர்ச்சிகள்; பாதிப்பை நீக்கும் புதன் கிழமை பரிகாரங்கள்

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில், சூரியன், வெள்ளி, செவ்வாய், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். இவற்றில் சில  பெயர்ச்சிகள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 20, 2022, 04:27 PM IST
  • சில பரிகாரங்களை ஆனி மாதத்தில் வரும் புதன் கிழமைகளில் மேற்கொள்ள வேண்டும்.
  • ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.
  • ஆனி மாதத்தில் 5 கிரக பெயர்ச்சிகள் நடைபெற உள்ளது.
ஆனி மாதத்தில் 5 பெயர்ச்சிகள்; பாதிப்பை நீக்கும் புதன் கிழமை பரிகாரங்கள் title=

தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதம் ஆனி மாதமாகும்.பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் 5 கிரக பெயர்ச்சிகள் நடைபெற உள்ளது. 

சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்திற்கு 32 நாட்கள் உள்ள
நிலையில், இந்த மாதம் சூரியன், வெள்ளி, செவ்வாய், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். 

ஆனி மாதத்தில் சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். பின்னர் 32ஆம் தேதி கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். ரிஷப ராசியில் இருக்கும் புதன், ஆனி 18 ஆம் தேதி மிதுன ராசிக்கு சென்று 32ம் தேதி கடக ராசியில் அமர்கிறார். மேஷ ராசியில் இருக்கும் சுக்கிரன் ஆனி 4ம் தேதி ரிஷப ராசிக்கு மாறி 29ம் தேதி மிதுன ராசிக்கு செல்கிறார். மீன ராசியில் இருக்கும் செவ்வாய்  ஆனி12ம் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் இருக்கும் சனி வக்ரம் அடைந்து 28ம் தேதி மகர ராசிக்கு வருகிறார்.

இவற்றில் சில  பெயர்ச்சிகள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆனி மாதத்தில் நடக்கும் பெயர்ச்சிகள் காரணமாக, இந்த காலகட்டத்தில் பலரின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும். அதிலும் புதன் பெயர்ச்சி காரணமாக சில இடங்களில் இடையூறுகள், தடைகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.  எனினும் இந்த காலகட்டம் வணிகத்திற்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இக்காலத்தில் வியாபாரம் அமோகமாக நடைபெறுவதுடன் சந்தையும் பிரகாசமாக காணப்படும்.

மேலும் படிக்க | Astro Remedies: சகல தோஷங்களையும் நீக்கும் சோமவார விரதம்

புதன் கிரகம் பெயர்ச்சி காரணமாக ஏற்படும் அசுபமான பலன்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, புதன் கிரகம் தொடர்பான சில பரிகாரங்களை ஆனி மாதத்தில்  வரும் புதன் கிழமைகளில் மேற்கொள்ள வேண்டும்.

- புதன் கிழமைகளில் அசுரர்களை அழிக்கும் விநாயகரை வழிபடவும்.

- புதன் கிழமை பசுவிற்கு பச்சை புல்லை உணவாக கொடுக்கவும்.

- புதன்கிழமையன்று திருநங்கைகளுக்கு பச்சை நிற ஆடைகள் அல்லது பச்சை வளையல்களை தானமாக வழங்குவது நல்ல பலன்களைத் தரும்.

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News