தினசரி ராசிபலன்: நடக்கப்போவதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு இன்றைய நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா, பாதகங்கள் இருந்தால் எவ்வாறு கவனமாக இருப்பது என்பதை திட்டமிட்டு இன்றைய தினத்தை நல்லபடியாக வாழ தினசரி ராசிபலனை தெரிந்துக் கொள்வோம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசிபலன் - Aries


இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.


ரிஷப ராசிபலன் - Taurus 


இன்று  சுப காரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். சேமிப்பு உயரும். கடன்கள் வசூலாகும்.


மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்!


மிதுன ராசிபலன் - Gemini 


இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். 


கடக ராசிபலன் - Cancer 


இன்று பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும்.நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் பாதிப்புகள் குறையும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.


சிம்ம ராசிபலன் - Leo 


இன்று வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம் இருக்கும்.


கன்னி ராசி - Virgo 


இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.


மேலும் படிக்க | நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!


துலாம் ராசிபலன் - Libra 


இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வழியாக அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். 


விருச்சிக ராசி - Scorpio  


செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சியில் ஏற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். இன்று உடன் இருப்பவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.


தனுசு ராசி - Sagittarius 


இன்று தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.


மேலும் படிக்க | நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!


மகர ராசிபலன் - Capricornus 


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 


கும்ப ராசிபலன் - Aquarius 


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். நவீனகரமான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும். 


மீனம் ராசிபலன் - Pisces 


இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நிதானம் தேவை.


மேலும் படிக்க | அன்னை மகாலட்சுமியின் பிறந்தநாள்: தந்தேராஸ் நாளில் செய்ய வேண்டிய குபேர பூஜை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ