இன்னும் 9 நாட்களில் சந்திர கிரகணம்.. அதீத கவனம் இந்த ராசிகளுக்கு தேவை
Lunar Eclipse 2024 Horoscope: இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி நிகழ உள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கிரகணத்தின் பலன் 12 ராசிகளிலும் தெரியும், எனினும் மூன்று ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
Lunar Eclipse 2024 Horoscope: சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் உலகம் முழுவதும் எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படும் நிகழ்வாகும். இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணங்கள் நடக்கிறது. இந்த சந்திர கிரகணங்களில் ஒன்று ஏற்கனவே மார்ச் 25, 2024 அன்று நிகழ்ந்தது. இப்போது இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18, 2024 அன்று நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும், இது உலகின் பல பகுதிகளிலும் தெரியும்.
சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 06:11 மணிக்கு நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் காலை 10.17 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 6 நிமிடங்களாக இருக்கும்.
இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா - உலகின் இரவுப் பகுதியிலிருந்து சிறப்பாகப் பார்க்கப்படும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணம் தெரியாது.. மேலும் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் பெனும்பிரல் கட்டம் மட்டுமே தெரியும்.
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி நிகழ உள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கிரகணத்தின் பலன் 12 ராசிகளிலும் தெரியும், எனினும் மூன்று ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த ராசிகளைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின் நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சுப காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இறைச்சி, மீன், முட்டை, வெங்காயம், பூண்டு, பாலாடைக்கட்டி, வினிகர் மற்றும் ஒயின் போன்ற தாமச உணவை உட்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும், பேச்சைக் கட்டுப்படுத்தவும்.
சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின் நேரம் சிறப்பாக இருக்காது. கவனமாக இருக்க வேண்டும். விவாதத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள். யாரிடமும் வெறுப்பு உணர்வுகளை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின் நேரத்தில் சிறப்பாக இருக்காது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். நீண்ட பயணங்கள் செல்வதை தவிர்க்கவும். மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி.. அரச வாழ்க்கை, அதிர்ஷ்டம் பொற்கால மழை இந்த ராசிகளுக்கு மட்டுமே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ