செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மட்டுமின்றி, நட்சத்திர மாற்றம், உதய அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சிகள், வக்ர நிவர்த்தி என பல வகையான மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் கிரகம்


செவ்வாய் கிரகம் முருகர் மற்றும் ஆஞ்சனேயருடன் தொடர்புடையது. செவ்வாய் கிரகம் மங்கள் கிரகரம், அதாவது சுபமான கிரகமாக கருதப்படுகின்றது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்த நபரின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் என்பது உறுதி. 


செவ்வாய் பெயர்ச்சி


2 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 18, 2023 அன்று மதியம் 3.14 மணிக்கு செவ்வாய் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சியாகவுள்ளது. செவ்வாய் பெயர்ச்சியால் ராசிகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை பலன்கள் என இரு வகையான பலன்களும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


கன்னி ராசியில் செவ்வாய் ஆறாம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால் ஆறுதல் மற்றும் தன்னிச்சையான உணர்வு இருக்கும். மறுபுறம், கன்னி ராசி தூய்மை, நேர மேலாண்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருப்பதால் செவ்வாய் கிரகத்தின் உள்ளார்ந்த குணங்களுக்கு ஒத்திசைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் 5 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அந்த ராசிகளை பற்றி காணலாம். 


மேஷ ராசி


ஜோதிடத்தின் படி, செவ்வாய் கன்னி ராசியில் பெயர்ச்சியாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் மேஷ ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். சட்ட விஷயங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமாக முடிவு வரலாம். இந்த நேரத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். ஏதேனும் சர்ச்சை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வார்த்தைகள் மற்றும் நடத்தையின் மீது கட்டுப்பாட்டை வைத்திருங்கள்.


மிதுன ராசி


மிதுன ராசிக்காரர்கள் செவ்வாயின் பெயர்ச்சியால் நன்மையடையப் போகிறார்கள். இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் அமையும். பொருளாதார முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நேரத்தில் தொழிலில் புதிய பொறுப்புகள் சாதகமாக இருக்கும் மற்றும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஈட்ட வேண்டியவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | குரு கொட்டும் பணமழை.. ராஜபோக வாழ்க்கை 'இந்த' ராசிகளுக்கு தான்


கன்னி ராசி


ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் இந்த ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவு காணப்படும். ஆனால் இந்த நேரத்தில் உங்கள் வார்த்தைகள் மற்றும் நடத்தையில் கட்டுப்பாடு மிக அவசியமாகும். 


விருச்சிக ராசி


விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சமூக உறவுகளில் பலம் காணப்படும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் தொழிலில் வெற்றி கிடைக்கும். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு இந்நேரம் நிவாரணம் கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும்.


தனுசு ராசி


செவ்வாய்ப் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் வாழ்வில் அபரிமிதமான நன்மைகளை தரவுள்ளது. இந்த காலத்தில் தொழில் துறையில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் தொழில்முறை பாதையில் மாற்றத்தை விரும்பினால், புதிய மற்றும் நேர்மறையான வாய்ப்புகள் உங்கள் வழியில் வரும். இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கோடீஸ்வர யோகம்.... புதன் பெயர்ச்சியால் இந்த ராசிகள் மீது பண மழை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ