அபார வெற்றி... அமோக வளர்ச்சி: சனி பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு வேற லெவலில் வாழ்க்கை
Sani Peyarchi: சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்கள் மீது சனி மிக அன்பாக இருப்பார்.
சனி பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். அவர் மிக முக்கியமான கிரகமாகவும் கருதப்படுகிறார். அவர் ஒரு ராசியில் நீண்ட காலத்துக்கு இருப்பதால் அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும்.
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப சனி பலன்களை அளிப்பதனால் அவர் நீதியின் கடவுள் என அழைக்கபடுகிறார். சனியின் ராசி மாற்றம் மட்டுமல்லாமல், அவரது அனைத்து மாற்றங்களும், இயக்கங்களும், நிலைகளும் வாழ்க்கையின் பல பகுதிகளை பாதிக்கிறது. தீய மற்றும் தகாத செயல்களை செய்பவர்களை சனி சோதிக்கிறார். அவரது கோவ பார்வை ஒருவர் மீது பட்டால், அவர் பொருளாதார, உடல், மன வேதனையைப் பெறுவது நிச்சயம். மனிதர்கள் சனி பகவானை கண்டு அஞ்சுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் சனி பெயர்ச்சியாகி கும்ப ராசியில் பிரவேசித்தார். இப்போது சனி 29 மார்ச் 2025 வரை கும்பத்தில் இருப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மார்ச் 2025 வரை சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்கள் மீது சனி மிக அன்பாக இருப்பார். இவர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவற்றில் 4 ராசிக்காரர்கள் மீதும் சனி மிகவும் அன்பாக இருக்கப் போகிறார். கும்ப ராசி பெயர்ச்சி ஆகி அங்கு சஞ்சரிக்கும் சனி பகவான் எந்தெந்த ராசிகள் மீது தனது அருளை பொழியவுள்ளார் என இந்த பதிவில் காணலாம்.
சனி இந்த ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவார்
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் அனுகூலமாக பலன்களை அளிக்கவுள்ளார். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இவர் சனி பகவானின் நட்பு கிரகமாக உள்ளார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக உள்ளது. இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம், வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த பயணங்கள் பல அனுகூலமான நற்பலன்களை அள்ளித்தரும். வருமானம் அதிகரிப்பதால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
மேலும் படிக்க | வக்ரமடையும் சுக்கிரன்... மேஷம் முதல் மீனம் வரை வரும் 56 நாட்களுக்கான பலன்கள் இதோ..!!
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். இவர்களின் அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப்படும். நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் இருந்த பணிகள் இப்போது நடக்கத் துவங்கும். தொழில் பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் நீங்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்கள் குணமாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலா ராசி:
துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். சனியின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். 2025 வரை சனி இவர்களின் வாழ்வில் பெரும் நிவாரணம் தருவார். இந்த மக்களின் போராட்டம் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் நிறைவேறும். தொழில்-வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கூட்டுப் பணிகள் முடிவடையும்.
தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் சுப பலன் தரும். சனி இவர்களுக்கு மன மற்றும் உடல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருவார். மன அழுத்தம் நீங்கும். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அக்டோபர் வரை அமோகமான பலன்கள்: இந்த ராசிகளுக்கு ராகு பெயர்ச்சியால் ராஜயோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ