அக்டோபர் வரை அமோகமான பலன்கள்: இந்த ராசிகளுக்கு ராகு பெயர்ச்சியால் ராஜயோகம்

Rahu Gochar, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், பல்வேறு கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த மாற்றம் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது. 

கிரகங்களின் பெயர்ச்சி வேத ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் மங்களகரமான மற்றும் அசுப யோகங்கள் கிரகங்களின் பெயர்ச்சியின் காரணமாகவே உருவாக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. கிரகங்களில் சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. ராகு 12 ஏப்ரல் 2022 அன்று காலை 11.58 மணிக்கு மேஷ ராசியில் பெயர்ச்சி ஆனார். அக்டோபர் 30 ஆம் தேதி அதிகாலை 2.13 வரை அவர் இங்கேயே இருப்பார். அதன் பிறகு மீன ராசியில் அவர் நுழைவார்.  

1 /8

ராகு, கேது: பொதுவாக ராகு-கேதுவின் பெயரைக் கண்டு மக்கள் அச்சப்படுவது உண்டு. ஆனால் அது அவசியமில்லை. ராகு கேது ஒருவரது ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் சுப பலன்களை பெறுகிறார். 

2 /8

ராகு பெயர்ச்சி: ராகுவின் பெயர்ச்சியால் ஏற்படும் தாக்கம் அக்டோபர் வரை அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில குறிப்பிட்ட ராசிகள் மீது அருள் மழையை பொழிவார் ராகு. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /8

ராசிகளில் தாக்கம்: ராகுவின் பெயர்ச்சியால் ஏற்படும் தாக்கம் அக்டோபர் வரை அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில குறிப்பிட்ட ராசிகள் மீது அருள் மழையை பொழிவார் ராகு. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

4 /8

கடகம்: இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் பண பலன்கள் கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணத்தில் இருந்தால் அதிக பலன் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை ஏற்படும். வியாபாரத்தில் லாபம் ஈட்ட முடியும். இது தவிர, நோய்களும் விலகி நிற்கும். 

5 /8

கும்பம்: இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். எனவே, இவர்களின் நம்பிக்கை இந்த காலத்தில் மிக அதிகமாக இருக்கும். வியாபாரத்தை முன்னேற்ற புதிய வழிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமின்றி வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  

6 /8

சிம்மம்: உத்தியோகத்தில் பல நன்மைகள் கிடைக்கும். அனைத்து இலக்குகளையும் எளிதாக அடைவீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். பயணங்கள் செல்வதால் அதிக செலவு ஏற்படும். ஆனால் இந்த பயணங்கள் மூலம் ஆக்கப்பூரவ்மான நன்மைகளை பெறுவீர்கள்.  

7 /8

விருச்சிகம்: வேலை தேடிகொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் ஊதிய உயர்வையும் பதவி உயர்வையும் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவுனர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.