Venus Transit 2023:  கிரகங்கள் தொலைதூரத்தில் தங்கள் இயக்கத்தை மாற்றும் போது, ​​அதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படுகிறது. கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலனையும் ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன், சுகம், செல்வம், வளம் மற்றும் செழுமை ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. பிப்ரவரி 15 அன்று, சுக்ரன் கிரகம் மீன ராசியில் மாறுகிறது. இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தால் மூன்று ராசிகளுக்கு மாளவ்ய ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தால் மூன்று ராசிகளிலும் பண மழையும், சுகபோகமும் பெருகப் போகிறது. அந்த மூன்று ராசிகள் என்னவென்று சொல்லுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்


ரிஷபம் ராசிக்காரர்கள் மாளவ்ய ராஜயோகத்தால் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். ஜாதகத்தின் 11வது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இதன் காரணமாக, உங்கள் வருமானம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் தொழிலில் வெற்றியையும் பெறுவீர்கள். நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால், நேரம் சிறப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!


கடகம்


சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகும். ஒன்பதாம் பாகம் அயல்நாடு மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம். இந்த மாற்றத்தால், உங்கள் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும், அதிர்ஷ்டமும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும்.


மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த பெயர்ச்சி ஜாதகரின் லக்ன வீட்டில் நடக்கும். எனவே, இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதைத் தவிர கூட்டு சேர்ந்து எந்த ஒரு வேலையும் செய்தால் அதில் பலன் கிடைக்கும். தொழிலிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ