இந்திய பாரம்பரிய ஜோதிட முறை, எதிர்காலத்தையும் கடந்த காலத்தில் நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றாற்போல, பலன்களை அளிப்பதாகக் கூறுகிறது. அதில், திருமணதை பாதிக்கும் தோஷங்கள் என்றால், அதில் தாரா தோஷம் முதலிடம் பெறுகிறது. ஒருவரின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணிக்கப்படும், ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் தார தோஷம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துக் கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தார தோஷம் ஒருபுறம் என்றால், இது தொடர்பாக மக்களுக்கு உள்ள பயம் மற்றும் கட்டுக்கதைகள் பெரிய கவலையை ஏற்படுத்துகின்றன. அது தவறான புரிதல்களையும் ஏற்படுத்துகிறது. அவற்றில் ஒன்று தான், மூல நட்சத்திர பெண்களை காட்டும் தயக்கமும் என்று புரிந்துக் கொள்ளலாம். இந்தக் கட்டுரையில் தார தோஷம் தொடர்பாக தெரிந்துக் கொள்வோம்.


தார தோஷம்
ஒருவருடைய ஜாதகத்தில் 8 மற்றும் ஒன்பதாம் இடம் வாழ்க்கை துணைக்கான தார ஸ்தானம் ஆகும். அந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ அல்லது சுக்கிரனை பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலோ அந்த ஜாதகம் தார தோஷம் கொண்ட ஜாதகம் என்று அறியப்படுகிறது. இந்த  தோஷமானது நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளை கொண்டே இந்த ஜென்மத்தில் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.


தார தோஷத்தின் பாதிப்பு
தார தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும். திருமணமான பிறகும், தங்களின் துணையிடம் காரணமே இல்லாமல் கருத்து வேறுபடும் சண்டையும் இருக்கும். பொதுவாக திருமணமானவர்கள் பிரிந்து வாழ்வது மற்றும் விவாகரத்துக்கான காரணங்களும் தார தோஷம் என்று கூறப்படுகிறது.  


மேலும் படிக்க | உதயமாகிறார் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு இனி அனைத்திலும் வெற்றி, அபரிமிதமான பண வரவு


களத்திர காரகர்


ஏழாவது வீடு என்பது களத்திர ஸ்தானம் ஆகும். குரு நேரடி பார்வையாக ஏழாவது வீட்டைப் பார்க்கும் பொழுது அது சுப பார்வையாக மாறி திருமணம் கைகூடும்.  


இரு தார தோஷம் என்றால் என்ன?
ஒருவருக்கு ஒரு திருமணம் மட்டுமல்லாமல், மற்றொரு திருமணம் செய்யக் கூடிய நிலைக்கு இருதார யோகம் / தோஷம் என்று பெயர். ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும், ஏழாமிடமும் பலவீனமாகி 11ஆம் இடம் வலுத்தால் இரண்டு திருமணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.


மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?
உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். ஒருவருடைய லக்னத்தில் இருந்து எட்டாம் இடம் தான் மாங்கல்ய ஸ்தானம். இதில் சூரியன், செவ்வாய், சனி , ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல, அது மாங்கல்ய தோஷம் உள்ள ஜாதகம் என்று அறியப்படுகிறது.


களத்திர தோஷம் என்ன செய்யும்?
களத்திர தோஷம் ஏற்படுவதால் திருமணத் தடை ஏற்படும். திருமணம் நடைபெற்றாலும், குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும். நிம்மதியற்ற தாம்பத்ய வாழ்க்கைக்கு களத்திர தோஷம் காரணமாகிறது.  


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Vastu: வீட்டில் பணத்தை அள்ளிக் குவிக்கும் சீன வாஸ்து! ஆமையின் வாயில் காசு அதிர்ஷ்டத்தைக் கொட்டும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!



Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ