புதுடெல்லி: அக்டோபர் 30 ஆம் தேதி முதல் எதிர்திசையில் இயங்கிக் கொண்டிருக்கும் செவ்வாய் கிரகம், 13 நவம்பர் அன்று ரிஷப ராசியில் வக்ர கதியாக பெயர்ச்சி ஆகிறார். அதன் பிறகு, 2023 ஜனவரி 13 அன்று வக்ர நிவர்த்தி பெறுகிறார் செவ்வாய் பகவான். அதன் பிறகு 12 மார்ச் 2023 வரை மிதுன ராசிக்கு செல்வார். இதனால் சுமார் 215 நாட்கள் ரிஷப ராசியில் தங்கியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான், உடன் பிறந்தவர், நிலம், வணிகம், வலிமை மற்றும் தைரியத்தின் அடையாளமாகும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செவ்வாய் பின்னோக்கிச் சென்று கிட்டத்தட்ட 200+ நாட்களுக்கு இரண்டு ராசிகளில் தங்கியிப்பார்.


இந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தின் போக்குவரத்து முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் இது இந்தியாவின் ஜாதகத்தின் லக்னத்தில் வந்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1990க்கு பிறகு இது போன்ற ஜாதக அமைப்பு ஏற்பட்டது.


மேலும் படிக்க | செவ்வாய் வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம்


செவ்வாயின் இந்த ராசி மாற்றங்கள், பல்வேறு ராசிகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். தசா புத்தி மற்றும் பிற கிரகப் பரிமாற்றங்களைப் பொறுத்து ராசி பலன்கள் மாறுபடும்.


அதிலும் சந்திரன் மற்றும் சூரிய கிரகணங்களின் அடிப்படையிலும் பலன்கள் மாறுபடலாம். ஒட்டுமொத்தமாக இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியால் பாதிப்பை அதிகம் சந்திக்கப் போகும் ராசிகள் இவை...


மேஷம்: ரிஷப ராசியில் செவ்வாயின் வக்ர இயக்கம் மேஷ ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தராது. பண இழப்புகள் ஏற்படும். பணியிடத்தில் ஒருவருடன் மோதல் ஏற்படும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். நிலம், சொத்து வாங்கும்போது அதிக கவனம் தேவை.


மேலும் படிக்க | சுக்கிரன் ராசி மாற்றம்: நவம்பர் 11 முதல் இந்த ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம், லாபம் பெருகும் 


மிதுனம்: வக்ர கதியில் இயங்கும் செவ்வாய் கிரகத்தால், செலவுகள் கூடும். பட்ஜெட்டில் எப்போதும் துண்டு விழும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் மோதல், பிரிவுக்கும் வழி வகுக்கலாம் என்பதால், நிதானமும், பொறுமையும் மிகவும் அவசியம். இல்லாவிட்டால், நிம்மதி பறிபோகும். 


துலாம்: ரிஷப ராசியில் செவ்வாயின் வக்ர கதி இயக்கத்தால், செய்யும் வேலையில் தடை, நிம்மதியின்மை, அழுத்தம் என மனதில் நிம்மதியே இருக்காது. விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்பதால் நிதானம் அவசியம். பணியிடத்தில் புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவெ, முடிந்த அளவு அமைதியை கடைபிடித்து, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்; இனி ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ