இன்று தனது ராசியான மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு மாறினார் செவ்வாய் பகவான். செவ்வாய் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது. இன்று முதல் 14 அக்டோபர் 2022  வரை ரிஷப ராசியில் இருக்கும் செவ்வாய் கிரகம், பலருக்கு நன்மையையும் சிலருக்கு வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத்தந்து செல்வார். பலம், வீரியம், விவேகம் ஆகியவற்றுக்கு காரணரான சுக்கிரனின் வீட்டில் இருப்பதால், சுக்கிர பகவானின் இயல்புகளான செல்வ வளம், கலை, காதல், ஈர்ப்பு, ஆகியவற்றின் தாக்கத்தையும் செவ்வாய் பெறுவார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜாதகத்தில் செவ்வாயின் அசுப நிலையால் சிக்கல் இருப்பவர்களுக்கு, இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி மேலும் பிரச்சனையை அதிகரிக்கலாம். இந்த செவ்வாய் பெயர்ச்சியால், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. இந்த ராசிக்காரவர்கள் சில ஜோதிட பரிகாரங்களை செய்து வாழ்க்கையில் நிம்மதியைப் பெறலாம்.


மேலும் படிக்க | ரிஷப ராசியில் செவ்வாய்; குபேர யோகத்தை பெறும் ராசிகள்!


ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய் கிரகமானது,  திருமண வாழ்க்கை தைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த செவ்வாய் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் கிரகங்களுக்கான பரிகாரம் பற்றி தெரிந்து கொள்வோம்...  


ஒருவரின் வாழ்க்கையில் கால நேரத்திற்கு ஏற்றவாறு சில கிரகங்கள் சாதகமாகவும், சில பாதகமாகவும் செயல்படும்.. பாதகமான அல்லது பலவீனமான கிரகங்களின் ஆட்சியின்போது, வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை நீக்க பரிகாரம் செய்யவில்லை என்றால் வாழ்க்கையில் துக்கமே மிஞ்சும்.


ஜாதகத்தில் செவ்வாய் அசுபமாக இருந்தால் திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்படும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். செவ்வாய் கிரகத்திற்கு பல பரிகாரங்கள் உள்ளது. அவற்றை செய்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை தன்மையை நீக்கலாம்.


மேலும் படிக்க |  நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்


அனுமாருக்கு வெற்றிலை மாலை
செவ்வாய்கிழமையன்று அனுமாருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுதலையைக் கொடுக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும், வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். செவ்வாய்க் கிழமையன்று பூந்தியை அனுமாருக்கு நைவேத்தியம் செய்து அதை அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும். இப்படி 21 வாரம் செய்து வந்தால் செவ்வாய் பகவானின் அருட்பார்வையைப் பெறலாம்.


செவ்வாய்க்கிழமையன்று முருகன் வழிபாடு
ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமையன்று வழிபடுவது மிகச் சிறந்த செவ்வாய்ப் பரிகாரமாகும். அதிலும் செவ்வரளிப் பூக்களால் முருகனை அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் நல்லது. இதனால், முருகனின் அருள் கிடைப்பதுடன், செவ்வாய் கிரகத்தின் எதிர்மறையான பலன்கள் நீங்கும். செவ்வாய்க்கிழமையன்று துவரம் பருப்பு தானமும் வாழ்வில் வளம் சேர்க்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ