சிம்மத்தில் சிக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களுக்கும் அவற்றின் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்களும், இயக்க மாற்றங்களும், உதய மற்றும் அஸ்தமன நிலைகளும், வக்ர பெயர்ச்சி மற்றும் வக்ர நிவர்த்தியும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் கிரகம் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. மனிதர்களின் உலக இன்பம், செல்வம், செழிப்பு, புகழ், அன்பு மற்றும் வாழ்க்கையில் ஈர்ப்பு ஆகியவை சுக்கிரன் கிரகத்தின் அருளால் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன. ஆகையால், ஜோதிட ரீதியாக சுக்கிரன் கிரகம் ஒரு நல்ல, சுபமான கிரகமாக பார்க்கப்படுகின்றது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தாலோ அல்லது அசுப நிலையில் இருந்தாலோ, அந்த நபர் பற்றாக்குறை மற்றும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார். அதுவே ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அவர் அனைத்து வித இன்பங்களையும், வெற்றிகளையும் பெறுகிறார். 


அக்டோபர் மாத தொடக்கத்தில் சுக்கிரன் கிரகம் மாற உள்ளது. சுக்கிரன்னின் பெயர்ச்சியால் இந்த மாதம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சிறப்பானதாக இருக்கும். அக்டோபர் 2, 2023 அன்று சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆவார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொன்னான நாட்களின் தொடக்கமாக இருக்கும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் செல்வம், பெருமை, செல்வச் செழிப்பு ஆகியவற்றைப் பெறுவார்கள். சுக்கிரனின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


சுக்கிரன் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு சாதகமான விளைவுகள் ஏற்படும்


ரிஷப ராசி


சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். எப்படியும் ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால், எப்போதும் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனுன் அருள் அதிகமாகவே இருக்கும். அக்டோபர் 2ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் இவர்களின் வாழ்வில் சுகபோகங்களும், வசதிகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தி இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் உங்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையைப் பெறலாம்.


மேலும் படிக்க | ஏழரை சனியை கடக்க அருள் புரியும் விநாயகரின் அருள் எந்த ராசிக்கு? 6 ராசிகளுக்கு நிம்மதி


சிம்ம ராசி


சுக்கிரன் சிம்மத்தில் பெயர்ச்சி ஆவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானமும் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். சில குறிப்பிட்ட தனித்துவமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். மேலும் சில நல்ல செய்திகளையும் இந்த காலத்தில் பெறுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.


துலா ராசி


துலா ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன் ஆவார். இப்படிப்பட்ட நிலையில் சுக்கிரனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களைத் தரப் போகிறது. இவர்கள் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். வெகு நாட்களாக தாமதம் ஆகிக்கொண்டு இருந்த சில பெரிய வேலைகளை இந்த காலத்தில் வெற்றிகரமாக செய்த் முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இந்த நேரம் தொழிலதிபர்களுக்கும் மிகவும் சாதகமாக இருக்கும். பெரிய பலன்கள் கிடைக்கக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சியால் பண மழை... இந்த ராசிகளுக்கு குபேர யோகம், சொர்க்க வாழ்க்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ