சனி பகவானின் மாற்றம்: நீதியின் கடவுளான சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் தனது இயல்பு நிலைக்கு மாறவுள்ளார். தீபாவளிக்கு முந்தைய நாள் சனியின் இந்த மாற்றம் நிகழவுள்ளது. ஆகையால் இந்த ஆண்டு தீபாவளி திருநாள் சனியின் இந்த மாற்றம் காரணமாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளார்கள். சனியின் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்கார்ரகள் அபரிமிதமான பலன்களை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி நாளில் உண்டாகப்போகும் சனி பகவானின் மாற்றத்தால். குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மற்றும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் ஒன்றாக கிடைக்கும். அவர்கள் அதிக பலன் அடைவார்கள்.


துலாம்: 


இந்தக் காலத்தில் துலா ராசிக்காரர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பல வழிகளில் வருமானம் அதிகரிக்கும். அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும். 


பண வரவு சாதகமாக இருக்கும். பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். தடைபட்ட வேலைகள் முடிவடையும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். காதல் திருமணத்தில் தடைகளை சந்தித்து வந்தவர்களுக்கு இப்போது தடைகள் விலகி அனைவரது சம்மதமும் கிடைக்கும். 


மேஷம்: 


மேஷ ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. வணிகத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்கார்ரகளுக்கு லாபம் பெருகும். சனி பகவானின் அருளும் அன்னை லட்சுமியின் ஆசியும் கிடைக்கும். லட்சுமி அன்னையின் சிறப்பு அருளால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க இது சிறந்த நேரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கௌரவமும் மதிப்பும் உயரும்.


மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றம்: திரிகோண ராஜயோகத்தால் பண மழையில் நனையப்போகும் ராசிகள் 


சிம்மம்: 


சிம்ம ராசிகளுக்கு சனியின் மாற்றம் வெற்றிகளை அள்ளிக்கொடுக்கும். இக்காலத்தில் எதிரிகள் தோல்வி அடைவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் நிறைவேறும். பயணங்கள் மூலம் மனம் மகிழும். இந்த பயணங்கள் பல அனுகூலமான பலன்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.


பண வரவு அதிகமாகும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் / மனைவி குழந்தைகளுக்கு இடையில் அன்பு பெருகும். நீதிமன்றத்தின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | ஐப்பசி 2022 மாத ராசிபலன்: சிம்மத்திற்கு ஏற்றம்! மீனத்திற்கு எச்சரிக்கை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ