சனி அஸ்தமனம், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, 2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் சனி கிரகத்தின் பார்வையில் மிகவும் முக்கியமானது. முதலில், ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பிரவேசித்தார். கும்பத்தில் சனி பெயர்ச்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. பெயர்ச்சி ஆகி சில நாட்களில், அதாவது ஜனவரி 30, 2023 அன்று, சனி தனது முக்கோண ராசியான கும்பத்தில் அஸ்தமனமாகப் போகிறார். இப்படி 15 நாட்களுக்குள் சனியில் ஏற்படப்போகும் மாற்றம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை, அனைத்து ராசிகளையும் பாதிக்கும். கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக கருதப்படும் சனி பகவானின் அஸ்தமனமும் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களைக் கொண்டு வரும். குறிப்பாக, சனி அஸ்தமிப்பது 3 ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரும். இந்த நேரம் இவர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சனியின் அஸ்தமன நிலையும், ராசிகளில் அதன் தாக்கமும்


மேஷம்:


சனி பகவானின் பெயர்ச்சி மற்றும் சனியின் அஸ்தமனம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். சனி இவர்களுக்கு தொழிலில் அனுகூலமான பலன்களை தருவார். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரம் பெருகும். 


தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவி கிடைக்கும். இவர்கள் முழு நிதானத்துடனும், கவனத்துடனும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். தற்போது வீடு, வாகனம் வாங்கு யோகம் உள்ளதால், அந்த கனவு கொண்டுள்ளவர்களின் விருப்பம் நிறைவேறும்.


ரிஷபம்:


ஜனவரி 17-ம் தேதி சனிப்பெயர்ச்சி ஆகி, அதன் பிறகு ஜனவரி 30 ஆம் தேதி சனி அஸ்தமமாவதால், ரிஷப ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். வருமானத்தில் உயர்வு இருக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வெற்றி இப்போது உங்களைத் தேடி வரும். 


அலுவலகம், சமூகம், குடும்பம் என அனைத்து இடங்களிலும் உங்கள் செல்வாக்கும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தானாக விலகும். இந்த காலத்தில் புதிய முயற்சிகளை தொடங்கலாம். அவை வெற்றிகரமாக நடந்து முடியும்.


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை! 


கன்னி:


கன்னி ராசிக்காரர்களுக்கு அஸ்தமன சனி மிகுந்த பலன்களைத் தருவார். எதிரிகள் அடிபடுவார்கள். நோய்கள் விலகும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். உங்களின் பணி வேகமாக நடைபெறும். மிக எளிதாக மிகப்பெரிய சிக்கல்களை சமாளித்து விடுவீர்கள். இது உங்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும். தொழில்-வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும்.


குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்று வருவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 


மகரம்:


மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசித்த சனி, தற்போது ஜனவரி 30-ம் தேதி கும்ப ராசியில் அஸ்தமமாகவுள்ளார். இந்த இரண்டு மாறுதல்களும் மகர ராசிக்காரர்களுக்கு உகந்தது. இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். பணிகள் வேகமாக நடைபெறும்.


நிதி ரீதியாக இந்த காலம் மகர ராசிக்காரர்களுக்கு மிக நல்லதாக இருக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபங்களை அள்ளித் தரும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தங்களை இறுதி செய்வீர்கள். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Venus Transit: சுக்கிர யோகத்தால் பிரபலமாகும் ராசிக்காரர்கள்! மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ