ரேவதி நட்சத்திரத்தில் புதனும் குருவும் சேர்க்கை ஒரு அற்புதமான இணைவை உருவாக்கும். இந்தக் கூட்டணி பல ராசிகளுக்கு சுப பலனை உண்டாக்கித் தரும். ஏனெனில் ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவான். அதேபோல ஒருவருடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மட்டும் வலுவாக இருந்தால் போதும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய அறிவாற்றலின் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வெற்றிகளை குவித்து விடுவார். அந்த வகையில் கடந்த மார்ச் 24 அன்று இரவு 07:19 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ளனர். மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு உடன் நீச்சம் பெற்ற புதன் இணைவு சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்கு, வருமானம் வரும். அந்த ராசிக்காரர்களுக்கு எவை என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷப ராசி
புதன் குரு சேர்க்கையால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பணவருமானம் அதிகரிக்கும். திடீர் வேலை வாய்ப்பு தேடி வரும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். 


மேலும் படிக்க | எண் ‘8’ மற்றும் ‘ஏழரை’ சனீஸ்வரருக்கும் உள்ள தொடர்பு! எட்டுக்கு அருள்புரிவார் சனி


மிதுன ராசி
புதன் உங்கள் ராசிக்கு அதிபதி. இந்த சேர்க்கையால் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். பண வருமானம் வரும் வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். 


விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களே, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் குரு சேர்க்கை பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. குழந்தைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரும்.


தனுசு ராசி
குரு புதன் கூட்டணி வீடு மற்றும் பணி இடத்தில் ஆறுதலான, சுகமான பலனைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். உடலில் இருந்த சோம்பல் விலகி சுறுசுறுப்பு அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும்.


கும்ப ராசி
கும்ப ராசிக்கு பண வருமானம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். 


மீன ராசி
மீன ராசிக்காரர்களே, குரு புதன் கூட்டணி அற்புத பலனை தரும். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ராம நவமியன்று இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், அபூர்வ யோக பலன் தரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ