டிசம்பரில் 3 முறை நிலை மாறும் புதன்... பண மழையில் நனையப் போகும் ‘3’ ராசிகள்!
2022 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில், செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் தொழில் வெற்றி ஆகியவற்றை அளிப்பவராக இருக்கும் புதன் மூன்று முறை தனது நிலையை மாற்றப் போகிறார்.
புதன் ராசி மாற்றம் டிசம்பர் 2022: ஜோதிடத்தில், புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். 2022 டிசம்பர் மாதத்தில், புதன் கிரகம் தனது நிலையை 3 முறை மாற்றுகிறார். டிசம்பர் 3, 2022 அன்று, புதன் விருச்சிக ராசியிலிருந்து விலகி தனுசு ராசிக்குள் நுழைந்துள்ளார். இதைத் தொடர்ந்து புதன் கிரகம் தனது ராசியை மாற்றி டிசம்பர் 28ஆம் தேதி மீண்டும் மகர ராசிக்குள் நுழைகிறார். இதற்குப் பிறகு, புதன் 30 டிசம்பர் 2022 அன்று வக்ர நிலையில் இருப்பார். செல்வம், வியாபாரம், தகவல் தொடர்பு ஆகியவற்றுக்குக் காரணமான புதனின் இந்த நிலை மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும்.
கீழ்கண்ட ராசிகளின் அதிர்ஷ்டத்தை டிசம்பர் மாதம் புதன் பிரகாசமாக்குவார்
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம்அபரிமிதமான பலன்களைத் தரும். வெளிவரும் ஆண்டில் புதனின் ராசி மாற்றமும், புதனின் வக்ர பெயர்ச்சியும் இவர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும்.
மேலும் படிக்க | டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!
ரிஷபம்:
புதனின் ராசி மாற்றமும், புதனின் வக்ர பெயர்ச்சியும் ரிஷப ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். தடை பட்ட வேலையில் விரைவில் முடிக்கப்படும். இன்ப சுற்றுலா செல்லலாம். புதிய வேலையில் சேரலாம். பதவி உயர்வு - சம்பள உயர்வு காணலாம். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட மறக்காதீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு புதன் கிரகம் மிகவும் சுப பலன்களைத் தரும். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். பண வரவு சாதகமாக இருக்கும். தனிமையில் இருப்பவர்கள் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். வெற்றியை அடையலாம். பங்குச்சந்தையில் அனுகூலம் உண்டாகும்.
கன்னி:
புதனின் ராசி மாற்றமும், புதனின் வக்ர பெயர்ச்சியும் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும். வீடு, வாகனம் வாங்கும் திட்டம் வெற்றி பெறும். சொத்து முதலீடு லாபம் தரும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். நெருங்கியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பமாக சுற்றுலா செல்லலாம்.
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்; புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!
மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா... சில எளிய ஜோதிட பரிகாரங்கள்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro: அறிவாற்றலை அள்ளித் தரும் 'புதன் கிரகம்' வலுவாக இருக்க செய்ய வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ