நாளை முதல் 4 ராசிகளுக்கு கொண்டாட்டம்! 2 ராசியினருக்கு பரவாயில்லை! எஞ்சியவர்கள் பாவம்
Mercury Vakranivarthi: புத்தாண்டின் முதல் நாளிலிருந்து புதிய வாரமும் தொடங்குகிறது. இந்த வாரம் கிரகப் பெயர்ச்சியின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும், மேலும் 5 ராசிக்காரர்களுக்கு தொழில், குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் பெரும் பலன்களைத் தரும்.
புதன் வக்ர நிவர்த்தி பலன்கள்: கிரகங்களின் இளவரசனாக வலம் வரும் புதன் பகவான் தனுசு ராசியில் டிசம்பர் 13ம் தேதி வக்ர பெயர்ச்சியை தொடங்கினார். வக்ர நிலையில் பின்னோக்கி நகர்ந்த புதன் கிரகம், டிசம்பர் 28ம் தேதி விருச்சிக ராசிக்கு மாறிய நிலையில், நாளை அதாவது 2024 ஜனவரி 2ம் தேதி விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது, அனைத்து வெவ்வேறு ராசி அறிகுறிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சிலருக்கு மன நிம்மதியையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.
2 ஜனவரி 2024 புதன் வக்ர நிவர்த்தி
புதன் நமது சூரிய மண்டலத்தின் மிகச்சிறிய மற்றும் வேகமாக நகரும் கிரகம் மற்றும் வேத ஜோதிடத்தின் படி, புதன் கிரகம், புத்திசாலித்தனம், பகுத்தறிவு மற்றும் தகவல் தொடர்பு திறன் கொண்ட ஒரு இளவரசனாகக் கருதப்படுகிறது. நமது புத்திசாலித்தனம், நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் ஆகியவற்றைக் குறிக்கும் கிரகமான புதன், நமது அனிச்சைகள், நரம்பு மண்டலம், நெகிழ்வுத்தன்மை, பேச்சு, மொழி தொடர்பு என தினசரி வாழ்க்கையில் நமது இயகக்த்தையும், எண்ண ஓட்டங்களையும் பாதிக்கிறது.
புதனின் இந்த ராசி மாற்றத்தால், சில ராசிகளுக்கு நன்மையைப் பயக்கும். உங்களுக்கும் புதனின் வக்ர நிவர்த்தி நன்மையத் தருகிறதா?
மேஷம்
அரசியல் பின்னணி உள்ளவர்களுக்கு நல்ல காலம். புத்திசாலித்தனமாக செயல்பட்டு, நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டிய சமயம் இது. ஆரோக்கியம் மற்றும் மன மகிழ்ச்சி மேம்படும்.
மேலும் படிக்க | புதன், குருவால் கோடீஸ்வர யோகம்.. இந்த வாரம் ராஜ வாழ்க்கை பெறப்போகும் ராசிகள் யார்
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சேமிப்பில் அதிகரிப்பு காணப்படும். உடல்நலம் மற்றும் சுகாதாரம் சீராக இருக்கும். ஆனால் உடல் நலனில் அக்கறை அவசியம்.
சிம்மம்
வேலை மற்றும் தொழில் வாழ்க்கை காரணமாக அடிக்கடி பயணப்பட வேண்டியிருக்கும் என்பதால், பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், மன நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். பண இழப்பு மற்றும் செலவு ஏற்பட்டாலும், அது சுபமானதாகவே இருக்கும் என்பதால் கவலை வேண்டாம்.
கன்னி
தனுசு ராசிக்கு புதன் வக்ர நிவர்த்தி, நல்ல பலன்களைக் கொடுக்கும். எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கேஜெட்கள் என ஏதேனும் புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் இருந்து வேலை செய்யும் தொழில் செய்பவர்களுக்கு சுமை சற்று அதிகரிக்கும் என்றாலும் திருப்தி இருக்கும்.
மீனம்
பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். ஆனால் அது திடீரென ரத்து செய்யப்படலாம். உடன்பிறந்த சகோதரருடனான மன வேறுபாடு சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் காலம் வந்துவிட்டது. சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக தென்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ