ராகு பெயர்ச்சி பலன் 2023: ஜோதிடத்தின் பார்வையில் 2023 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த ஆண்டு பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. அதில் ராகுவும் ஒன்று. ஜோதிடத்தில், ராகு நிழல் கிரகம் என அழைக்கப்படுகிறது. ராகு சஞ்சாரத்தில் ராசி மாற ஒன்றரை வருடங்கள் ஆகும். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மதியம் 1.33 மணிக்கு மீன ராசியில் பிரவேசிக்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் ராகு அசுப நிலையில் இருந்தால், அந்த நபர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில், மறுபுறம், அவரது பெயர்ச்சி பல ராசிகளுக்கு சுப பலன்களைத் தரப்போகிறது. மீனத்தில் ராகு நுழைந்தவுடன் 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறத் தொடங்குவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் ராகுவின் சஞ்சாரத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். இதனால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம். இந்த பெயர்ச்சி வணிகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களின் வியாபாரம் முன்னேற்றம் அடையும், அதிக லாபம் ஈட்ட முடியும்.


மேலும் படிக்க | தமிழகத்தில் பொங்கும் ‘பொங்கலோ பொங்கல்’; மற்ற மாநிலங்களில் மகரசங்கராந்தி!


கன்னி ராசி


ராகுவின் ராசி மாற்றம் குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு பலன் தரும். கூட்டாண்மையில் செய்யப்படும் ஒவ்வொரு வேலையும் வெற்றியடைவதோடு பெரும் நிதி ஆதாயமும் உண்டாகும். இந்தக் காலக்கட்டத்தில் புதிய தொழிலையோ அல்லது கூட்டுத் தொழிலையோ தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கைக்கும் இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான உறவுகள் அமையும்.


மேலும் படிக்க | Makar Sankranti: மகர சங்கராந்தி ராசிபலன்கள்: சமூக அந்தஸ்து அதிகரிக்கும் ராசிகள்


கும்பம்


ராகுவின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். எதிர்பாராத பண ஆதாயத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழிலதிபர்கள் அதிக லாபம் ஈட்ட முடியும்.


மீனம்


ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுவார். இத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. முதலீடு செய்ய சிறந்த நேரம். கடன் கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும், அதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Happy Pongal 2023: பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ