செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2022: ஆகஸ்ட் 10 அன்று செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றியது. இதை நாம் ஜோதிடத்தில் செவ்வாய் பெயர்ச்சி என்போம். அந்த வகையில் செவ்வாயின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கிறது. அதேபோல் செவ்வாய் கிரகம் கடின உழைப்பு, துணிச்சல், வலிமை, தைரியம் மற்றும் ஜாதகத்தில் வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. பொதுவாக ஜோதிடத்தில், கிரகங்களின் மாற்றம் அல்லது பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன்படி செவ்வாய் சஞ்சரிக்கும் போது சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கும், அதேசமயம்  இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே செவ்வாய் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் பெயர்ச்சி காரணமாக இந்த நான்கு ராசிக்காரர்களின் வாழ்வில் பண மழை உண்டாகும். 


ரிஷபம்- ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பலன்களை தருவார். இதன் போது நீங்கள் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலமாக இருக்கும். பழைய சச்சரவுகள் உங்களிடமிருந்து அகலும்.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி இன்று: 5 ராசிகளுக்கு மோசமான பலன்கள்! இந்த பரிகாரங்களை செய்யலாமே 


துலாம்- செவ்வாய் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பண ஆதாயம் ஏற்படுத்தி தரும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.


சிம்மம் - செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை தருவார். இதன் போது உங்கள் கையில் எந்த வேலை செய்தாலும் வெற்றியில் முடியும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழலாம். அதேபோல் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பழைய கடனில் இருந்து விடுபாடுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். அதேபோல் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.


கும்பம்- செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக கும்ப ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மேம்படும். இந்த காலகட்டத்தில், நீங்கள் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த நேரம் நல்ல நேரமாக அமையும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அருள் மழை, மகிழ்ச்சி திக்குமுக்காட வைக்கும்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ