ஏப்ரல் மாத ராசிபலன்: ஏப்ரல் மாதம் காமத ஏகாதசியுடன் தொடங்கப் போகிறது. இது தவிர, இந்த மாதத்தில் புதன், குரு, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களின் ராசிகளில் மாற்றம் ஏற்படும். இதனுடன், இம்மாதம் சூரிய கிரகணமும் நிகழும். இந்த ஆண்டின் முதல் கிரகணம் இதுவாகும். விரதங்கள், பண்டிகைகள் மற்றும் கிரகப் பெயர்ச்சிகள் நிறைந்த இந்த மாதம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்


ஏப்ரல் 05 முதல் 09 வரை தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஏப்ரல் 14க்கு பிறகு தடைபட்டிருந்த பணிகள் நடந்துமுடியும். வியாபாரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஏப்ரல் 15க்கு பிறகு வேலை மாற்றத்திற்கு சாதகமான காலம். 


ரிஷபம் 


இந்த மாதம், ஏப்ரல் 14 க்குப் பிறகு, குரு மற்றும் சூரியன் அருளால் வேலையில் சில பெரிய நன்மைகளைப் பெறுவீர்கள். வாகனம் வாங்கும் எண்ணம் இந்த மாதம் நிறைவேறும். ஏப்ரல் 05 வரை உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளலாம். 


மிதுனம் 


ஏப்ரல் 09 முதல் 15 வரை மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நேரம். உங்களின் நிதித் திட்டங்கள் நல்ல முறையில் நடந்துமுடியும். ஏப்ரல் 15க்கு பிறகு வேலையில் நின்று போன பணிகள் நடக்கும். 


கடகம்


ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 21 வரை, நீங்கள் வேலையில் சிறப்பு பதவிக்கு முயற்சிப்பீர்கள். அரசியல்வாதிகள் வெற்றி பெறுவார்கள். முடங்கிக் கிடக்கும் அரசுப் பணிகள் பல நடந்துமுடியும். 


சிம்மம்


இந்த மாதம் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். துர்கா தேவியுடன் சிவபெருமானை வழிபடுங்கள். பயணத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏப்ரல் 14க்கு பிறகு சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பது அரசியல்வாதிகளுக்கு சிறப்பான பலன்களைத் தரும். 


மேலும் படிக்க | சுக்கிரனின் அருளால் ஏப்ரலில் ராஜ வாழ்க்கை வாழப்போகும் ‘சில’ ராசிகள்!


கன்னி


வியாபாரத்தில் நிறுத்தப்பட்ட பணிகளை இந்த மாதம் முடிப்பீர்கள். ஏப்ரல் 16க்கு பிறகு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தினமும் பெற்றோரின் பாதங்களைத் தொட்டு அவர்களின் ஆசிகளைப் பெறுவதன் மூலம் சூரியனும் சந்திரனும் அனுகூலமான நிலைக்கு வருவார்கள். ஏப்ரல் 15க்கு பிறகு சூரியன் மற்றும் குருவின் பெயர்ச்சி பண வரவை தரும். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். 


துலாம் 


ஏப்ரல் 14க்குப் பிறகு, சூரியன் மற்றும் சுக்கிரனின் சஞ்சாரம் வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் தரும். சந்திரனின் தாக்கத்தால் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தினமும் சிவபெருமானை வழிபடுங்கள். ஏப்ரல் 14 முதல் 21 வரை பதவி உயர்வு சாத்தியமாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு நன்மை தரும். பண வரவு இருக்கும். 


விருச்சிகம்


ஏப்ரல் 14க்கு பிறகு உயர் அதிகாரிகளால் நன்மைகளை நடக்கும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கிப் பணிகளில் பதவி உயர்வு சாத்தியமாகும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். 


தனுசு 


இந்த மாதம் குருவும் சனியும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையச்செய்வார்கள். ஏப்ரல் 14க்கு பிறகு பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. 


மகரம்


வேலை, வியாபாரத்தில் நற்பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். 


கும்பம்


ஏப்ரல் 14க்குப் பிறகு கும்ப ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். முதல் வாரத்தில் வீடு கட்டுவது தொடர்பான பணிகளைத் தொடங்கலாம். சிவபெருமானை தவறாமல் வழிபடுங்கள். பச்சை மற்றும் வெள்ளை நிறம் மங்களகரமானதாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியால் நன்மைகளைப் பெறுவீர்கள். 


மீனம்


ஏப்ரல் 02 முதல் 09 வரை உடல்நிலையில் கவனக்குறைவு தவிர்க்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள். வீடு கட்டுவது தொடர்பான தடைபட்ட வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரிஷப ராசியில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்! பணவரவால் மகிழும் 3 ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ