புதனின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் தொடங்கும்!!

Budh Gochar: புதனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2023, 11:02 AM IST
  • மேஷ ராசியில் புதனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
  • இவர்கள் தொழிலில் ஆதாயம் அடைவார்கள்.
  • வருமானம் அதிகரிக்கும்.
புதனின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் தொடங்கும்!! title=

புதன் பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தின்படி, இன்று, அதாவது மார்ச் 31, 2023, வெள்ளிக்கிழமை, புதன் கிரகம் பெயர்ச்சியாகிறது. புதன் பெயர்ச்சியாகி மேஷ ராசியில் நுழைகிறார். ஒரு கிரகம் தனது ராசி மற்றும் இயக்கத்தை மாற்றினால், அதன் பாதிப்புகளும் தாக்கங்களும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கும். எந்த கிரகம் பெயர்ச்சியாகிறதோ, அந்த கிரகம் தொடர்பான துறைகளில் அதிக பாதிப்புகள் காணப்படும். 

புதனின் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். புதனின் பெயர்ச்சி பணம், வியாபாரம், புத்திசாலித்தனம், தர்க்கம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை பாதிக்கும். மேஷ ராசியில் புதன் நுழைவது 12 ராசிக்காரர்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி மிகப்பெரிய நல்ல பலன்களை அளிக்கும். புதன் கிரகம் இன்று, மார்ச் 31, 2023, மதியம் 2.44 மணிக்குப் பெயர்ச்சியாகிறது. புதனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ராசிகளில் புதன் பெயர்ச்சியின் தாக்கம்

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். வேலையில் வெற்றி பெறலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். இதனால் வருமானம் கூடும். பண வரவுக்கான புதிய வழிகள் அமையும்.

கடகம்: 

புதனின் ராசி மாற்றத்தால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் பொன்னான நாட்கள் தொடங்கும். இவர்கள் தங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறத் தொடங்குவார்கள். வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு வரும். இந்த பயணத்தால் அனுகூலமான பல நல்ல விஷயங்கள் நடக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். 

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி 2023: ஆசைகள் அத்தனையும் நிறைவேறும்... இந்த 5 ராசிகளுக்கு இது ஜாக்பாட் காலகட்டம்!

சிம்மம்: 

மேஷ ராசியில் புதனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்கள் தொழிலில் ஆதாயம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். சம்பளம் அதிகரிக்கலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும். பெரிய ஆர்டர்களை பெற அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கும் மிக நல்ல நேரமாக இருக்கும். 

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் அதிகப்படியான நற்பலன்களைத் தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நிதிநிலை மேம்படும். குறிப்பாக தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: புதிய முயற்சிகளை தள்ளிப்போடவும்... நிதானம் அவசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News