Lucky Zodiac Signs of July 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஜூலை மாதத்தில் சில முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்ற உள்ளன. இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இன்று அதிகாலை சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் தாக்கமும் அடுத்த சில மாதங்களுக்கு இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத் தவிர சுக்கிரன் ஜூலை மாதத்தில் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். கிரகங்களின் அரசராகக் கருதப்படும் சூரியன் கடகத்தில் பெயர்ச்சியாவார். செவ்வாய், குரு மற்றும் சனி பகவானின் நிலைகளும் இந்த மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையக இருக்க உள்ளன. பல்வேறு கிரக மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இந்த கிரக மாற்றங்களால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். பல விதமான வெற்றிகளும் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.


ஜூலை மாத லக்கி ராசிகள்


ரிஷபம் (Taurus)


ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு விரும்பியபடி ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பண வரவிற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எனினும் மிகவும் நிதானத்துடன் செலவு செய்வது நல்லது. இல்லையெனில் சேமிக்க முடியாது. வாழ்க்கை துணையுடனான உங்கள் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.


கடகம் (Cancer)


கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் அவர்களது பல கனவுகள் நிறைவேற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் வேலைகளை மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். இந்த மாதம் முழுவதும் சந்தோஷத்துடனும் திருப்தியுடனும் இருப்பீர்கள். நல்ல செய்திகள் கிடைக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்.. வெற்றிகள் குவியும்!!


கன்னி (Virgo)


ஜூலை மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அனைத்து கட்டங்களிலும் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். வருவாய் அதிகரிக்கும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். முதலீட்டிற்கு ஏற்ற மாதமாக இது கருதப்படுகின்றது. இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.


துலாம் (Libra)


துலா ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் லாபகரமானதாக இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் அதிக லாபம் காண்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். முன்னர் செய்த முதலீடுகளால் இப்பொழுது நல்ல லாபம் கிடைக்கும். இப்போது புதிய முதலீடுகளையும் செய்யலாம். 


மகரம் (Capricorn)


மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வங்கி இருப்பு அதிகமாகும். உங்கள் வசதிகள் பெருகும். பணி இடத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். நீண்டநாள் ஆசை ஒன்று இப்பொழுது நிறைவேறும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதே கழிப்பீர்கள். சுற்றுலா சென்று வர வாய்ப்புள்ளது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Astro: ஒரு தலைவனாகும் அனைத்து பண்புகளும் ‘இந்த’ ராசிகளுக்கு உண்டு... உங்க ராசி என்ன.!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ