குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்.. வெற்றிகள் குவியும்!!

Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு 2025 வரை அமோகமான நன்மைகள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2024, 11:46 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
  • இந்த நேரத்தில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்..  வெற்றிகள் குவியும்!!

Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களுக்கும் அவற்றுக்கான ஒரு முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இவற்றால் சில ராசிகளில் நல்ல பலன்களும் சில ராசிகளில் பாதிப்புகளும் ஏற்படும். 

Add Zee News as a Preferred Source

அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுகிறார். அறிவாற்றல், கல்வி, செல்வம், திருமணம், குழந்தைகள் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார் குரு பகவான். தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு குரு அதிபதியாக உள்ளார். குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 1 ஆண்டு காலம், தோராயமாக 13 மாதங்களுக்கு இருக்கிறார். 

குரு பகவானின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. சமீபத்தில் குரு மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு வரை குரு இந்த ராசியில் இருப்பார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு 2025 வரை அமோகமான நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்த ராசிக்காரர்கள் மீது குருவின் விசேஷ பலன்கள் கிடைக்கும்

ரிஷபம் (Taurus)

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு பகவான் தற்போது ரிஷப ராசியில்தான் உள்ளார். ஆகையால், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அதிக பயனுள்ளதாக இருக்கும். 2025-ம் ஆண்டு வரை அவர் இந்த ராசியில் இருப்பார். பணி இடத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியும், பல புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வணிகத்தில் முதலீடு செய்யலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பண பலம் கூடும். 

மேலும் படிக்க | Astro: ஒரு தலைவனாகும் அனைத்து பண்புகளும் ‘இந்த’ ராசிகளுக்கு உண்டு... உங்க ராசி என்ன.!!

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த நேரத்தில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பொருளாதார லாபத்தைப் பெறலாம். பல இடங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பழைய கடன்களிலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். தொழிலிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

சிம்மம் (Leo)

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ரிஷபத்தில் குரு பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கும் அதிகப்படியான நன்மை பயக்கும். தொழில் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். நிதி ஆதாயத்திற்கான பல புதிய வாய்ப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் புதிய சொத்து, வாகனம்  முதலியவற்றை வாங்கலாம். தந்தையுடனான உறவுகள் வலுவடையும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயம் கூடும். பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News