ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இன்று அதாவது அக்டோபர் 14 ஆம் தேதி மிகவும் சிறப்பான நாள். சந்திரன் சனி தேவரின் மூல முக்கோண ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில், சுக்கிரனும் சந்திரனில் இருந்து 10 ஆம் வீட்டில் இருக்கிறார். இந்த கிரக நிலையால் அமலா யோகம் உருவாகியிருக்கிறது. இந்த யோகம் கடகம், மிதுனம் உட்பட 4 ராசிகளுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரனின் தண்மையான கருணையால் யோகம் பெறும் 4 ராசிகளை பற்றி தெரிந்து கொள்வோம்...


அமலா யோகத்தால் பலனடையும் மிதுன ராசி
மிதுனம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு சாதகமான காலம். முதலீட்டில் நல்ல லாபம் பெறலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் வரலாம். வேலை செய்பவர்களால் முதலாளி மகிழ்ச்சியாக இருப்பார். உங்களின் பணிக்கான பாராட்டுக்களைக் கேட்பீர்கள். மன உளைச்சல் நீங்கும். சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள்.


மேலும் படிக்க | கலைமகள் சரஸ்வதியின் கடாட்சத்தை பூரணமாக பெற அறிவுத்தேடல் தொடங்கும் விஜயதசமி நாள்!


அமலா யோகத்தால் பலனடையும் கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் அமலா யோகம், செய்த முதலீடுகளுக்கு நல்ல பலனைத் தரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல காலம் இது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பெற்றோரின் முழு ஆதரவுவும் அன்பும் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.


அமலா யோகத்தால் பலனடையும் கன்னி
கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் வளமும் செழுமையும் அதிகரிக்கும். முதலீடு நல்ல லாபத்தைக் கொடுக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும்.  


அமலா யோகத்தால் பலனடையும் கும்பம்
கும்ப ராசிக்குள் நுழையும் சந்திரனின் பலத்தால், கும்ப ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த மன அழுத்தம் குறையும், மன பிரச்சனைகள் தீரும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். உழைக்கும் மக்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும், பணியிடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் தென்படுகிறது. சம்பள உயர்வும் கிடைக்கலாம். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு உண்டு.


மேலும் படிக்க | வரும் வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! 8 ராசிகளுக்கு கவனம் தேவை! புரட்டாசி கடைசி வார பலன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ