Guru Peyarchi Palangal, Jupiter Transit 2024: ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களின் ராசியை மாற்றும். இந்த கிரங்களின் ராசி மாற்ற மிகவும் முக்கியமானவாய்ந்த  நிகழ்வாகும். அந்த வகையில் நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் விழாயன் இன்னும் 50 நாட்களில் பெயர்ச்சியடையப் போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் இதன் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு கிரகத்தின் (Guru Gochar 2024) பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் என்பதால், வருகிற மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, பண வரவு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சாதகமான பலன் கிடைக்கும். ஏனெனில் ரிஷப ராசியின் ஜென்ம ராசிக்கு குரு வருகிறது. இதனால் உங்களின் நிதி நிலை முன்பை விட அதிகரித்து மேம்படும். செலவுகளும் அதிகரிக்கலாம். புதிய வேலை வாய்ப்பை பெறலாம். திருமண வாழ்க்கையும் இனிமையாக மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாழக்கிழமை குரு பகவானை வணங்க நன்மைகள் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.


மேலும் படிக்க | Mars Transit 2024: கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்


சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் மிகவும் பயனுள்ள பலன் கிடைக்கும். தொழில் தொடர்பாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறலாம். பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக முடிவுக்கு வரும். நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். புதிய வேலைகளைத் தொடங்க மே மாதம் சாதகமாக இருக்கும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள்.


கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். தொழிலில் பதவி உயர்வைப் பெறலாம். பல முக்கிய பணிகளை இந்த நேரத்தில் முடிவடைப்பீர்கள். சுபிட்சம் உண்டாகும். பணியிடத்தில் நிமித்தமான் சூழல் இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பிள்ளைகள் தரப்பிலிருந்தும் நல்ல செய்தியை பெறுவீர்கள். பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைக் காணலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சூடிக் கொண்ட பெருமானுக்கு சிறப்பு செய்யும் சந்திரன்! ‘மூன்றாம்பிறை’ தரிசனத்தின் சிறப்பும் சிவவழிபாடும்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ