குரு வக்ர பெயர்ச்சி, ராசிகளில் இதன் தாக்கம்: ஜோதிடத்தின் படி, கிரகங்களில் அனைத்து வகையான இயக்கங்களுக்கும், நிலைகளுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அவ்வப்போது தலைகீழாக அதாவது வகர் நிலையில் பயணிப்பது உண்டு. அதன் பிறகு அவை வக்ர நிவர்த்தி பெற்று நேர் இயக்கத்துக்கு மாறும். இது தவிர, கிரகங்களின் ராசி மாற்றங்கள், அஸ்தமன உதய நிலைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பகவான்


தேவ குரு வியாழன் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். பல வித நல்ல பலன்களை அளிக்கும் சுப கிரகமாக அவர் பார்க்கப்படுகிறார். மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், திருமணம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் காரணியாக குரு கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை பட்டால் அவர் வாழ்வில் அனைத்து வித சந்தோஷங்களையும் பெறுகிறார். 


குரு வக்ர பெயர்ச்சி


குரு பகவான் ஏப்ரல் 22 அன்று மேஷ ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த நிலையில் செப்டம்பரில், அவர் வக்ர பெயர்ச்சி அடைவார். வக்ர நிலையில் குரு மீன ராசியில் நுழைவார். 4 செப்டம்பர் 2023 அன்று காலை 9:15 மணிக்கு குரு வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். மீனத்தில் குருவினின் இந்த மாற்றம் நிகழவுள்ளது. இது மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. 


மேலும் படிக்க | அள்ளிக்கொடுக்கப்போகும் சனி.. பணத்தை வாரிக்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்


ராசிகளில் தாக்கம்


குரு பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு அமோகமான வெற்றி கிடைக்கும். இத்தனை நாட்களாக தடைபட்டிருந்த பல பணிகள் இப்போது நடந்துமுடியும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷ ராசி: 


குரு பகவானின் வக்ர இயக்கம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அளிக்கும். வக்ர இயக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். பண வரவு அதிகமாகும். புதிய வருமான வழிகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். மாணவர்களுக்கு அதிக வெற்றி கிடைக்கும். அவர்களுக்கு படிப்பில் நாட்டம் பிறக்கும். 


மிதுன ராசி


குருவின் வக்ர பெயர்ச்சி, மிதுன ராசிக்காரர்களுக்கு மிக நல்ல செய்திகளை கொண்டு வரும். வெற்றிகள் பல குவியும் காலமாக இது இருக்கும். தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வாழ்வில் இது நல்ல காலமாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
 
சிம்ம ராசி: 


சிம்ம ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் முதலீடு செய்யும் இடங்களில் பொருளாதார நன்மை ஏற்படும். பணம், பதவி, புகழ் அதிகரிக்கும்.  தடைபட்ட வேலைகள் முடிவடையும். சில காலமாக வாட்டி வதைத்து வந்த நோய்கள் சரியாகும். 


மீன ராசி: 


குரு வக்ர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலை மேம்படும். பண வரவு அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க |  அற்புதமான வாழ்க்கை, அமோக பலன்கள்: சுக்கிரன் உதயத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ