சுக்கிரன் பெய்ரச்சியால் உருவாகும் லட்சுமி யோகம்: இந்த ராசிகள் மீது பண மழை, தொட்டது துலங்கும்
Shukra Gochar and Lakshmi Yog: சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்படும் லட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும்.
மகர ராசியில் லக்ஷ்மி யோகம்: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் மட்டுமின்றி இவற்றின் இயக்கங்கள், அஸ்தமன, உதய நிலைகள் என பல வகை மாற்றங்கள் ஏறப்டுகின்றன. அவ்வப்போது கிரகங்களில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவற்றால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கின்றன.
இம்மாத இறுதியில் மே 30ம் தேதி சுக்கிரன் கிரகமும் தன் நிலை மாறப் போகிறார். மே 30 இரவு 7.29 மணிக்கு சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக லக்ஷ்மி யோகம் உருவாகப் போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, மகர ராசிக்காரர்கள் லட்சுமி யோகத்தால் சிறப்பான செல்வத்தைப் பெறுவார்கள். சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்படும் லட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரன் சஞ்சாரத்தால் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலத்தில் நிலம், வாகனம், வீடு போன்றவற்றை வாங்கும் யோகம் உள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இதுமட்டுமின்றி இவர்களின் சம்பளமும் உயரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும். பெரிய ஒப்பந்தம் ஒன்று வெற்றிகரமாக இறுதி செய்யப்படும்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 3 ராசிகளுக்கு பண யோகம்!
மிதுனம்
சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், பண ஆதாயங்களும் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும். இந்த நேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. காதல் விவகாரங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அங்கீகாரம் கிடைக்கும். வருமான வழிகளில் உயர்வு இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், செலவுகள் அதிகமாக இருக்கும் மற்றும் சேமிப்பதும் கடினமாக இருக்கும்.
கடக ராசி
ஜோதிட சாஸ்திரப்படி மே 30 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். உங்கள் ஆளுமை காரணமாக இந்த காலத்தில் அனைவரும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் தெரிகிறது. நகை வியாபாரிகளுக்கும் இந்த நேரம் நன்மை பயக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்கள் சில பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பல வெற்றி வாய்ப்புகளைத் தரும். உங்கள் மனதில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. குடும்பப் பெரியவர்களின் ஆசியைப் பெறுவீர்கள். திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம்.
மகரம்
மகர ராசியில் சுக்கிரனின் சஞ்சாரத்தால் லட்சுமி யோகம் உருவாகப் போகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் அதிகப்படியான லாபத்தையும் வெற்றியையும் காணப்போகிறார்கள். பண பலன்களுடன் இவர்களுக்கு இந்த காலத்தில் பல சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும், புதிய சொத்து வாகனம் ஆகியவற்றை வாங்குவார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உச்சத்தில் இருக்கும். காதலர்களுக்கு வீட்டில் ஒப்புதல் கிடைத்து திருமணம் நிச்சயமாகும். இந்த நேரத்தில் நீங்கள் பெயரும் புகழும் அடைவீர்கள், சமுதாயத்தில் கவுரவம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ