குரு வக்ர நிவர்த்தி: நஷ்டம், சண்டை, துரோகம்.. இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை, ஜாக்கிரதை!!
Guru Vakra Nivarthi: குரு பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு குருவின் இந்த மாற்றம் பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
Guru Vakra Nivarthi: ஜோதிட சாஸ்திரத்தில் குருவுக்கு தேவர்களின் குரு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவர் மிக அனுகூலமான, நல்ல பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். திருமண மகிழ்ச்சி, குழந்தைகள், நல்ல அதிர்ஷ்டம், அறிவு, கல்வி, பேச்சாற்றல், மரியாதை, நல்லொழுக்கம், ஆகியவற்றுக்கு இவர் காரணியாக உள்ளார். சுப கிரகமான குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால் அவர் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுவார். அவர் வெற்றியின் உச்சம் தொடுவதை யாராலும் தடுக்க முடியாது. குருவின் அருள் பெற்ற நபர்களுக்கு அறிவாற்றல் மேம்பட்டு, சமூகத்தில் நல்ல கௌரவத்தையும் அனுபவிப்பார்கள்.
2024 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, குரு வக்ர நிவர்த்தி அடைந்தார். இப்போது குரு (Lord Guru) மேஷ ராசியில் உள்ளார். அவர் அடுத்த 4 மாதங்களுக்கு மேஷ ராசியில் இதே நிலையில் இருப்பார். இதற்குப் பிறகு, மே 1, 2024 அன்று அவர் பெயர்ச்சி ஆகி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு வக்ர நிவர்த்தி (Guru Margi):
குரு பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இது அற்புதமான சுப பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் இவர்கள் வேலை, வியாபாரம் என அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு குருவின் இந்த மாற்றம் பல பிரச்சனைகளை கொண்டு வரும். இவர்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். குரு வக்ர நிவர்த்தியின் காரணமாக கடினமான நாட்களை எதிர்கொள்ளவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
குரு வக்ர நிவர்த்தியால் சிக்கலில் சிக்கவுள்ள ராசிகள் (Unlucky Zodiac Signs):
துலாம் (Libra):
துலாம் ராசிக்கு அதிபதி குரு பகவானின் எதிரி கிரகமான சுக்கிரன். ஜோதிடத்தின் படி, இந்த இரண்டு கிரகங்களுக்கும் இடையே பகை உணர்வு உள்ளது. எனவே, குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து இருப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. இவர்கள் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்வில் டென்ஷன் இருக்கும். நிதி இழப்பு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் அபாயகரமான முதலீடுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
மேலும் படிக்க | தனுசு ராசியில் புத-ஆதித்ய யோகம்... வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 5 ராசிகள்!
விருச்சிகம் (Scorpio):
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வக்ர நிவர்த்தி அடைந்த குரு அசுப பலன்களையும் தருவார். இவர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் சண்டைகள் அல்லது பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இடைவெளி உருவாகலாம். உங்கள் உறவில் பிரச்சனைகள் உருவாகும். உங்களுக்கு பிடித்தமானவர்களே நீங்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம். இந்த காலத்தில் நன்றாக சிந்தித்து முடிவுகளை எடுப்பது நல்லது. உடல்நிலை மோசமடையலாம். வேலை செய்பவர்களுக்கும் பணி அழுத்தம் இருக்கும். நீங்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
மகரம் (Capricorn):
குரு பகவானின் வக்ர நிவர்த்தி உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். அதனுடன் ஒப்பிடுகையில் வருமானம் நடுத்தரமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். எனவே, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு விபத்து நேரலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். சுற்றுலா செல்ல வாய்ப்புகள் வரும். ஆனால் இவற்றால் மீண்டும் செலவுகள் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆண்டியையும் அரசனாக்கும் லக்ஷ்மி நாராயண யோகம்... பலன் பெறும் ‘3’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ