மாத ராசிபலன்: அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு நிதி நெருக்கடி, சவாலான காலம்
Monthly Horoscope-October 2022: நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்படும். அக்டோபர் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
அக்டோபர் மாத ராசிபலன்: அக்டோபர் மாதத்தில் பல கிரகங்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் இந்த ராசி மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்லதாகவும் சில ராசிக்காரர்களுக்கு சவாலாகவும் இருக்கும். அக்டோபர் மாதத்தில், சூரியனைத் தவிர, சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் ஆகியவையும் ராசியை மாற்றுகின்றன. ஆகையால், இந்த மாதம் அனத்து ராசிகளிலும் கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் காணப்படும். எனினும், இந்த நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்படும். அக்டோபர் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்
அக்டோபர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். வேண்டும் என நினைக்கும் விஷயங்கள் கிடைக்காமல் போகலாம். தொழில், வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். கிரக நிலை மாற்றத்தால் செலவுகள் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொஞ்சம் யோசித்த பிறகே பணத்தைச் செலவு செய்யுங்கள். இல்லையென்றால் கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சற்று சவாலான மாதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் சம்பந்தமான சங்கடங்கள் ஏற்படலாம். அதனால் சவாலான சூழல் உருவாகலாம். உறவினர்களுக்கு இடையே கசப்பான வாக்குவாதங்கள் வரக்கூடும். ஆகையால், எதையும் சொல்லும் முன் யோசித்து சொல்லுங்கள். இல்லையெனில், பின்னர் வருத்தப்பட வேண்டி வரலாம். திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம். உங்கள் நெருங்கிய சொந்தங்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். அது நிச்சயமாக பயனளிக்கும்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் தீபாவளிக்கு பிறகு பிரகாசிக்கும்
கன்னி
அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் நிலை மாறுவதால் கன்னி ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திக்க நேரிடும். மறுபுறம், சிலரது காதல் வாழ்க்கை இந்த மாதம் சற்று சவாலானதாக இருக்கும். எனவே கொஞ்சம் பொறுமையாக இருங்கள். குடும்ப மகிழ்ச்சிக்கு பொறுமை மிக அவசியம். இதனுடன், உறவில் கசப்பு ஏற்படாமல் இருக்க, உங்கள் பேச்சில் கொஞ்சம் கட்டுப்பாட்டை வைத்திருங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சற்று தொல்லை தரும். இந்த மாதம் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். வீண் செலவுகளில் சற்று கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அப்போதுதான் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சற்று சவாலாக இருக்கும். அக்டோபர் மாதத்தில் பல கிரகங்களின் நிலை மாறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மீன ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இதனுடன், வேலை மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | நவராத்திரி முதல் இந்த 5 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ