அடுத்த 23 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பண மழை பொழியும்
Surya Gochar 2023: மார்ச் 15ஆம் தேதி சூரியன் மீன ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்தார். குருவின் ராசியான மீனத்தில் சூரியன் பெயர்ச்சி அடைவது சிலருக்கு பலமான பலன்களைத் தரும்.
சூரியப் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில் சூரியன் வெற்றி, ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையின் காரணியாகக் கருதப்படுகிறது. இதனுடன், சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும் கருதப்படுகிறது, அதேபோல் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுவார். அந்தவகையில் இம்முறை சூரியன் கடந்த மார்ச் 15 ஆம் தேதி மீன ராசியில் இடம்பெயர்ச்சி அடைந்தார், மேலும் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்த ராசியில் தான் அமர்ந்திருப்பார். இதன் போது சில ராசிகள் மிகவும் சுப பலன்களை பெறுவார்கள். எனவே அடுத்த 23 நாட்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் அபரிமிதமான செல்வத்தையும் வெற்றியையும் தருவார்
ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்கள் சூரியனின் பெயர்ச்சியால் மிகுந்த நன்மை அடைவார்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், இது உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உயர் பதவி, கௌரவம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
மேலும் படிக்க | ராகுவின் நட்சத்திரத்தில் சனி: இந்த ராசிகளுக்கு கெடுபிடி காலம், குழப்பங்கள் பெருகும்
மிதுன ராசி: சூரியனின் பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு கௌரவத்தையும் மரியாதையையும் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் இந்த ராசிக்காரர்கள் பெறுவீர்கள்.
கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள், உங்கள் வேலைகளில் வெற்றியைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். தொழில், வியாபாரம் இரண்டிற்கும் நல்ல நேரம்.
துலாம் ராசி: சூரியனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பெரிய வெற்றியைத் தரும். உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். இவர்களுக்கு ஏப்ரல் 14 வரையிலான காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி: சூரியனின் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பெரும் லாபத்தைத் தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு ராசி: ஏப்ரல் 14 வரை சூரியன் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவார். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! 2025 மார்ச் வரை சனியின் பிடியில் சிக்கித் தவிக்க போகும் ‘ராசி’ இது தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ