குரு அஸ்தமனம்: அடுத்த 28 நாட்கள் இந்த ராசிகளுக்கு கஷ்ட கலாம், ஜாக்கிரதை
Guru Asta in Meen Rashi 2023: மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ், செல்வம் ஆகியவற்றைத் தரும் குரு கிரகம் மீனத்தில் அஸ்தமனமானார். குரு அஸ்தமனம் சிலருக்கு கஷ்டங்களை தரும். எனவே அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்போம்.
Jupiter Combust 2023 in tamil: கடந்த மார்ச் 28 அன்று, நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பவரான குரு தனது சொந்த ராசியான மீன ராசியில் அஸ்தமனமானார். ஜோதிட சாஸ்திரத்தில் எந்த ஒரு கிரகமும் அஸ்தமனமாவது நன்மையாக கருதப்படுவதில்லை என்றாலும், குரு அஸ்தமனம், சுப காரியங்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்துவார். மேலும் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை குரு இதே நிலையில் தான் இருப்பார், இதற்கிடையில் ஏப்ரல் 22-ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி மேஷ ராசிக்குள் நுழைகிறார். இதனால் அது வரை எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாகக் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
குரு அஸ்தமனம் இன்னல்களை தருவார்
மேஷ ராசி- மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும். தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். புதிய வேலையும் தொடங்க வேண்டாம், ஏனென்றால் அதிர்ஷ்டம் உங்களிடம் இருக்காது. மன அழுத்தம் தொல்லை செய்யலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அக்ஷய திருதியையில் உருவாகும் 7 யோகங்கள்! 3 மடங்கு பலன் கொடுக்கும் பரிகாரங்கள்!
சிம்ம ராசி- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்னல்கள் ஏற்படும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வரலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். சோம்பல் ஆதிக்கம் செலுத்தும். பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சையும் இருக்கலாம். மதப் பணிகளில் மனம் ஈடுபடாது.
கும்ப ராசி- கும்ப ராசிக்காரர்களுக்கு அதிக தொல்லை ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் எரிச்சல் இருக்கும், இது குடும்ப உறுப்பினர்களுடன் தகராறை ஏற்படுத்தும். விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்யவே வேண்டாம். ஏப்ரல் 27க்குப் பிறகு முக்கியமான வேலைகளைச் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | மேஷத்தில் சூரியன்! சித்திரை மாதத்தில் சவால்களை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ