மாத ராசிபலன் நவம்பர் 2022: நவம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மாதமாகவும், சிலருக்கு சுமாரான மாதமாகவும் இருக்கும். நவம்பர் 2022 உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை மாதாந்திர ராசி பலனில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஆன  நவம்பர் மாதம் பலன்கள் வெவ்வேறானதாக இருக்கும். அதில் 4 ராசிக்காரர்களுக்கு நிறைய பணம்  வரவு கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அனைத்து ராசிகளுக்கும் ஆன பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்


நவம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படலாம். பட்ஜெட்டை மனதில் வைத்துக் கொண்டு செலவு செய்யுங்கள். எல்லோரையும் நன்றாக நடத்தி, சுமுகமாக பழகுங்கள். சகோதர சகோதரிகள் உங்களால் நன்மை அடைவார்கள். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும்.
 
ரிஷபம்


ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தின் ஆரம்பம் சுமாராக இருந்தாலும், பின்னர் வரும் நாட்கள் சிறப்பாக இருக்கும். வரவுசெலவுத் திட்டத்தை கெடுக்கும் வகையில் செலவுகள் அதிகரிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன, அதனால் கவனமாக செலவிடுங்கள். எனினும், தொழிலுக்கு நல்ல காலம் அமையும். புதிய வேலை, இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆனால் உடல்நலம் மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பச் சொத்துக்களால் லாபம் உண்டாகும்.


கடகம்


நவம்பர் 2022 கடக ராசிக்காரர்களுக்கு ஏற்றத் தாழ்வுகளை கொண்டு வரும். தொழில் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பணத்தை சேமிக்கவும்.



மேலும் படிக்க | Astro: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ சில எளிய புதன் கிழமை பரிகாரங்கள்!


சிம்மம் 


சிம்ம ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் பலன் தரும். பணியிடத்தில் சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.


கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கூட்டுப் பணிகள் சாதகமாக அமையும். பண வரவு அதிகரிக்கும். உடல்நலம் பலவீனமாக இருக்கலாம்.


துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வாழ்க்கையின் சில முக்கியமான பகுதிகளில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பதவி உயர்வு-உயர்வு பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் திடீரென்று நடக்கும். குடும்ப பிரச்சனைகளை பொறுமையாக சமாளிக்கவும். நோய், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.


விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாத தொடக்கத்தில் சுமாராகவே இருக்கும். ஆனால் இரு வாரத்திற்கு பிறகு நிலைமை சிறப்பாக இருக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.


தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக வருத்தி வந்த நோய் குணமாகும்.


மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். வருமான உயர்வால் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வசதிகள் பெருகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலையைத் தொடங்கலாம். வியாபாரத்திற்கும் நல்ல நேரம். எனினும் உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.


மேலும் படிக்க | துலாமில் இணையும் மூன்று கிரகங்கள்; பிரச்சனையில் சிக்கும் ‘சில’ ராசிகள்!


கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சுமாரானதாக இருக்கும். தொழிலில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இடமாற்றம் ஏற்படலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நன்கு ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுங்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.


மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம் ஆனால் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். தொழிலுக்கு நல்ல நேரம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ