வாழ்வுக்கும் மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் தொழிலுக்கும், திருமணத்தில் மகிழ்ச்சி நிலவுவதற்கும், மரணத்திற்கும் குழந்தை பிறப்பிற்கும் என வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் வைத்திருக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் சண்டை போடும் குணத்திற்கான கிரக அமைப்பையும் சொல்கிறது. குரு மகரத்தில் இருந்தால் சண்டைக்காரராக இருக்கும் ஜாதகரும் உண்டு, அதே மகரத்தில் இருக்கும்போது வாய் மூடி மெளனியாக உள்ள ஜாதகரும் உண்டு. ஒருவரின் குணத்தை நிர்ணயிப்பது கிரக அமைப்புகள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி உச்சம்.. அதான் ஒரே சண்டை என்று யாரும் பொத்தம் பொதுவாக சொல்லிவிட முடியாது. கிரஹங்களின் ஸ்தானம் என்பது ஜாதக பரிசீலனையில் ஓர் அம்சம் மட்டுமே.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி இன்று! இந்த பரிகாரங்களை செய்யலாமே


ஒரு வீட்டில் இருக்கும் கிரகங்களில் பலம் அவரது வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும். கிரஹங்கள் அமைந்திருக்கும் இடத்தினால் கிரகங்களுக்கு கிடைக்கும் பலம் ஸ்தானபலம் என்று சொல்லப்படுகிறது. 


கிரஹங்கள் அமைந்திருக்கும் இடங்களை, அவை அமைந்திருக்கும் திசைகளைக் கொண்டு அளவிடும் முறை திக் பலம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது லக்ன கேந்திரம் என்பது முதல் இடம்,  சதுர்த்த கேந்திரம் என்பது நான்காம் இடம், சப்தம கேந்திரம் என்பது, பத்தாமிடமாகிய தசம கேந்திரம். இதில் கேந்திர ஸ்தானத்தில் அல்லது அதன் அருகே எந்த கிரஹம் இருந்தால் அதன் பலம் என்ன எனும் கணக்கு உண்டு


தற்காலிகமான பலம் என்று சொல்லப்படுவது கால பலம். இதில் ஹோரை பலம், தினசரி பலம், வருஷ பலம், மாத பலம், அயன பலம், பட்ச பலம் , த்ரிபாக பலம், யுத்த பலம், நதோ உன்னத பலம் என மொத்தம் ஒன்பது உட்பிரிவுகள் உண்டு.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், கேட்டது கிடைக்கும்


சேஷ்ட பலம் இது இடம் மாறுவதால் ஏற்படும் வலிமையை குறிக்கும் என்றால், இயல்பாக அமைந்த பலம் நைசார்க்கிக பலம் ஆகும். பிற கிரகங்களின் பார்வைகளினால் வரும் பலம் த்ரிக் பலம் எனப்படும். 


ஒவ்வொரு பலமும் எப்படிக் கணக்கிடப்பட வேண்டும் என்பதற்கும் கணக்குகள் உண்டு. ஷட் பலம் என்று சொல்லப்படும்  ஆறு பலங்களும் கணக்கிடப்பட்டு முதல் மூன்று இடங்களில் வரும் கிரஹங்கள் அந்த ஜாதகருக்கு அந்த கிரஹங்கள் என்ன காரகத்துவம், ஆதிபத்யம், அடிப்படை குணாதிசயங்களை கொடுக்கிறது என்பதை பார்க்க வேண்டும். 



கிரஹ பெயர்ச்சியின் போது கிரஹம் எந்த நட்சத்திரங்களின் சாரங்களில் பயணிக்கிறது என்பதையும், எந்த பாவகத்தில் பயணிக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அதிலும் அது ஜாதகருக்கு என்ன பாவகம் என்பதையும், நிகழும் தசை, புத்தி, அந்தரம், சூட்சம தசை என பல்வேறு அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டே கிரக பெயர்ச்சி பலன்கள் சொல்லப்பட வேண்டும். 


ஆனால், பொதுவாக செவ்வாய்ப் பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி இந்த ராசிக்கு அல்லது நட்சத்திரத்திற்கு நன்மை செய்யும் அல்லது தீமை செய்யும் என்று பொத்தாம்பொதுவாக சொல்வது தவறு.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை) 


மேலும் படிக்க | சுக்கிரனின் அருளால் இந்த ராசிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம், தொட்டது துலங்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ