சனி வக்ர பெயர்ச்சி 2022: வேத ஜோதிடத்தின்படி சனி பகவான் மகர ராசியில் வக்ரமாகியுள்ளார், அதாவது பிற்போக்கு நிலையில் இருக்கிறார். சனி பகவான் ஜூலை 13 முதல் பிற்போக்கு நிலையில் உள்ளார். சனி அக்டோபர் 23 வரை இந்த நிலையில் நீடிப்பார். அதாவது இன்னும் 3 மாதங்களுக்கு சனி பிற்போக்காக இருக்கப் போகிறார். சனியின் வக்ர நிலை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சனி பகவானின் இந்த நிலை காரணமாக தனுசு, துலாம், மிதுனம் ஆகிய மூன்று ராசிகளில் அதிகப்படியான மாற்றங்கள் காணக்கிடைக்கும். இந்த ராசிகள் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கத்தில் உள்ளனர். பொதுவாக இந்த தாக்கத்தில் இருக்கும் ராசிக்காரர்கள் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த மூன்று ராசிக்காரர்களும் அக்டோபர் 23ம் தேதி வரை இந்த நிலையைத் தாங்க வேண்டும். பின்னர் சனி பெயர்ச்சியாகி 2023 ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைவார். அப்போது தனுசு, துலாம், மிதுனம் ஆகிய ராசிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி கும்பம் மற்றும் மகரத்தின் அதிபதி ஆவார். மேலும் அவர் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு எப்போதும் சாதகமாக இருபார். மறுபுறம், சனி துலாம் ராசியில் உச்சமாக உள்ளார். துலா ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் சகல சௌபாக்கியங்களையும், மதிப்பு மரியாதையையும், வெற்றியையும் பெறுகிறார்கள். சனியின் பிற்போக்கு நிலை குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். 


மேஷம்: 


மேஷ ராசியினருக்கு சனியின் பிற்போக்கு நிலை நன்மை தரும். சனி பகவான் கோச்சார ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் வக்ரமானார். இந்த இடம் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புக்கான இடம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் மரியாதைக்குரிய புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் மேஷ ராசிக்கார்ரகலளுக்கு நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும்.


மேலும் படிக்க | இன்னும் 5 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு மகாலட்சுமி யோகம் கிடைக்கும்


மீனம்: 


சனிப் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களின் ஜாதகத்தின் பதினொன்றாமிடத்தில் வக்ரமாக நடந்துள்ளது. இந்த நிலை வருமானம் மற்றும் ஆதாய நிலை என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கலாம். மேலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்கார்ரகள் புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிக்கக்கூடும். மறுபுறம், உங்கள் வணிகம் அல்லது தொழில் சனி கிரகத்துடன் தொடர்புடையதாக இருந்தால், அதிகப்படியான செல்வமும் லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


தனுசு: 


தனுசு ராசியில் சனி பகவான் வக்ரமாகியுள்ள ஸ்தானம் செல்வம் மற்றும் பேச்சாற்றலுக்கான இடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், பங்கு சந்தை அல்லது லாட்டரி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் தனுசு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தின் கீழ் செல்வதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். மன உளைச்சலும் ஏற்படக்கூடும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | சனி அமாவாசை பரிகாரங்கள்! இதை செய்தால் 5 ராசியினரை சனீஸ்வரர் பாதுகாப்பார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ