ஆவணி மாதம் வந்தாச்சு! கிரகங்களின் ராஜா சூரியனின் ஆசி பெறும் 5 சூப்பர் ராசிகள்
powerful transit of sun: கடக ராசியில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருந்த சூரியன், இன்று ஆகஸ்ட் 17, 2023 அன்று சிம்ம ராசிக்கு மாறியதால் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும்?
கிரகங்களின் ராசி மாற்றம் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது, அனைத்து ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறுவிதமான பலன்களைக் கொடுக்கிறது. கிரகங்களின் அரசனான சூரியன் மாதந்தோறும்ம் ராசி மாறிக்கொண்டே இருப்பார். இந்த மாதம், ஆகஸ்ட் 17, 2023 அன்று, சூரியன் பெயர்ச்சிக்குப் பிறகு சிம்ம ராசியில் நுழைகிறார். சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன் 11 மாதங்கள் கழித்து தனது ராசியான சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார்.
கடக ராசியில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருந்த சூரியன், இன்று ஆகஸ்ட் 17, 2023 அன்று சிம்ம ராசிக்கு மாறிவிட்டார். சூரியனின் ராசி மாற்றம் சிம்மத்தில் புதாதித்ய ராஜயோகத்தை உண்டாக்குவது மிகவும் சுபமானதாகும். சூரிய பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்கள் இன்று முதல் நல்ல வாழ்க்கையை வாழ்வார்கள்.
ஜோதிடத்தின் பார்வையில் மிகவும் சிறப்பான நாளான இன்று, 11 மாதங்கள் கழித்து சூரியன், தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் சூரியனின் சஞ்சாரம் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். இதனுடன் ஏற்கனவே சிம்மத்தில் புதன் கிரகம் இருப்பதால் சூரியனின் ராசியான சிம்மத்தில் சூரியனும் புதனும் இணைவது புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கும்.
ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் புதாதித்ய ராஜயோகம் சிம்மத்தில் உருவாவது மிகவும் சுபமானதாக கருதப்படுகிறது. பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்கவும் மகத்தான வெற்றியையும் செல்வத்தையும் தரப்போகும் சூரிய சஞ்சாரத்தின் சுப பலன்கள் இவை.
மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... அட்டகாசமான நற்பலன்கள் கைகூடும்
சூரியப் பெயர்ச்சியின் சுபபலன்கள்
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மிகவும் சுப பலன்களைத் தரும். உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செயல்திறன் சிறப்பாக இருக்கும். தொட்டதெல்லாம் துலங்குக்ம். வேலையில் பதவி உயர்வு அல்லது பாராட்டுகளை கிடைக்க வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மிதுனம்: சூரியனின் ராசி மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பும், அவர்களுடன் நல்ல உறவை மேம்படுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும். வேலைக்கு பாராட்டும், மரியாதை மட்டுமல்ல, செல்வமும் வசதியும் வந்து சேரும்.
துலாம்: சூரியனின் சஞ்சாரம், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். உங்கள் வேலைகள் அனைத்தும் விரைவாக முடிவடையும். திடீர் பணவரத்து மனதில் மகிழ்ச்சியைத் தரும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். விரும்பிய பதவியும் பணமும் கிடைக்கும்.
மேலும் படிக்க | தினபலன் ஆகஸ்ட் 17, 2023: இன்று சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்..!
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சிம்ம சஞ்சாரம் மிகவும் மங்களகரமானது மற்றும் சுபபலன்களைத் தரும். புதிய வாய்ப்புகளைக் கொடுக்கும் சூரிய பெயர்ச்சி, அரசு மற்றும் அதிகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும். பொருளாதார ஆதாயத்தை தரும் என்பதால் பணத்திற்கு பிரச்சனை ஏதும் இருக்காது. ஆனால், மற்றவர்களின் சொற்பேச்சைக் கேட்காமல், உங்கள் சுயபுத்தியின் அறிவுரையைக் கேளுங்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் இந்த நேரம் நன்மைகளைத் தரும். தன்னம்பிக்கை அதிகரித்தால் பணியில் வெற்றி கிடைக்கும். ரிஸ்க் எடுத்து லாபம் அடைவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகள் வலுப்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆத்ம காரகர் சூரியனின் ஆவணி மாதப் பெயர்ச்சி! கவனமா இருக்க வேண்டியது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ