கிரகங்களினால் ஏற்படும் பிரச்சனை: கடன் தொல்லையில் இருந்து வழிபட வேண்டிய தெய்வங்கள்
இறை வழிபாடு கிரகங்களால் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, நன்மைகளை அதிகரித்துக் கொடுக்கும். மனவலிமையை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | இன்று சூரியன் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்
மிதுனம்: இந்த, ராசிக்காரர்கள் முருகனை வழிபடுவது நல்லது. செவ்வாய் ஹோரையில் செவ்வரளி மலரை முருகனுக்கு சமர்ப்பித்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது அனுகூலத்தை கொடுக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்வது மாற்றத்தை கொடுக்கும் கடன்களை அடைக்கும். புதன் மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் கடனை ஆரம்பிக்கத் தொடங்குவது நன்மையைக் கொடுக்கும்.
கடகம்: குரு ஹோரையில் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அவர்களுக்கு நன்மை வந்து சேரும். குரு ஹோரையில் சிறு பகுதி கடன்களை அடைக்கத் தொடங்குவது மாற்றத்தைக் கொடுக்கும். சிவனை வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் விநாயகர் அகவல் சொல்வதும் - அருகம்புல்லை விநாயகருக்கு சமர்ப்பிப்பதும் நன்மையைக் கொடுக்கும். சூரியன் மற்றும் செவ்வாய் ஹோரையில் கடன்களை அடைக்கத் தொடங்குவது இவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும். சூரியன் மற்றும் செவ்வாய் திசையில் புதிய விஷயங்களை ஆரம்பிப்பது மாற்றத்தைக் கொடுக்கும்.
கன்னி: பைரவர் வழிபாடு மற்றும் நவக்கிரகங்கள் வழிபாடு மேற்கொள்வது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். புதன், குரு மற்றும் சுக்கிரஹோரைக்ளில், கடன்களை அடைக்க தொடங்குவதன் மூலம் கடன் விரைவில் அடையும்.
சூரியன் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சரி இல்லை, எச்சரிக்கை தேவை
துலாம்: சுக்கிரன் மற்றும் குரு ஹோரையில் கடன்களை அடைக்க ஆரம்பிப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லது. மகாலட்சுமி வழிபாடு மிகவும் நல்லது. லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வதும், அன்னை மகாலட்சுமிக்கு தாமரை மலரை அர்ப்பணித்து வழிபடுவதும் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
விருச்சிகம்: முருகனை சரணடைந்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்லது. கந்த குரு கவசம் சொல்லி முருகன் வழிபாடு செய்து வருவதும் வேல் பூஜை செய்வது போன்ற விஷயங்கள் செய்வதும் கடன்கள் அடைவதற்கான சூழ்நிலையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் கடன்களை அடைக்க தொடங்குவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்லது.
தனுசு: அன்னை பார்வதி வழிபாடு தனுசு ராசியினருக்கு நல்லது. சுமங்கலி பூஜை செய்து வருவதும், மஞ்சள் பொடியால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதும் கடன்களை அடைப்பதற்கான நல்ல பரிகாரமாக இருக்கும். குரு மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன்கள் அடையும்.
மேலும் படிக்க | 2 நாட்களில் 2 முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி, 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை
மகரம்: வாராஹி தேவிக்கு பூஜை செய்து வணங்கி வருவது கடன்களை அடைப்பதற்கான நல்ல பரிகாரமாக இருக்கும். புதன் மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் இவர்கள் இதை செய்வது நல்ல மாற்றத்தை கொடுக்கும். குலதெய்வ வழிபாடும் முன்னோர்கள் வழிபாடும் செய்து வருவது நன்மையைக் கொடுக்கும்.
கும்பம்: அம்பாள் வழிபாடு செய்து வருவது மிக நல்ல பரிகாரம். செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் முக்கியமான செயல்களை செய்வதும் கடன்களை அடைப்பதும் நல்லது. தினசரி வீட்டில் ஐந்து முக தீபம் ஏற்றி அம்மனை வழிபாடு செய்து வருவதும், அபிராமி அந்தாதி சொல்லி வருவதும் வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
மீனம்: முருகன் வழிபாடு செய்து வருவது மீன ராசிக்காரர்களுக்கு நல்லது. கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபடுவது அவசியம். மீன்கள் மற்றும் ஜீவராசிகளுக்கு உணவு அளிப்பது போன்றவை நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய பரிகாரம் ஆகும்.
செவ்வாய் மற்றும் குரு ஹோரைகளில் கடன்களை அடைக்க ஆரம்பிப்பது என்பது மிகுந்த நன்மை கொடுக்கக் கூடிய அற்புதமான பரிகாரம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சூரியன்: எந்த ராசிகளுக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR