2 நாட்களில் சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரரின் சம்பளம் அதிகரிக்கும்

Sun Transit: இன்னும் இரண்டு நாட்களில் சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சூரியனின் இந்தப் பெயர்ச்சியால் ஊதிய உயர்வால்  மகிழப் போகும் ராசிகள் இவை...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2022, 06:40 AM IST
  • துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும்.
  • சிம்ம ராசியினருக்கு தொழிலில் பல நன்மைகள் உண்டாகும்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்
2 நாட்களில் சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரரின் சம்பளம் அதிகரிக்கும் title=

ஜோதிடத்தில் சூரியன் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது. சூரியன் ஒரு மாதத்தில் ஒரு முறை ராசியை மாற்றுகிறது. 

சூரிய பகவான் பித்ரு காரகன் என்று அழைக்கப்படுபவர். சனீஸ்வரரின் தந்தையும் சூரிய பகவான் தான். அதோடு, ஒருவரின் வாழ்க்கையில் வெற்றி, வேலை, அரசியல், ஆரோக்கியம், மரியாதை ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார். ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், தொழிலில் வெற்றிகளைப் பெறுவது சாத்தியமாகும்.

சூரியன் சஞ்சாரம் 2022: ஜாதகத்தில் சூரிய கிரகம் வலுவாக இருக்கும்போது, ​​அந்த நபருக்கு வேலை, மரியாதை, கௌரவம் போன்றவை கிடைக்கும். இந்த 4 ராசிக்காரர்கள் பலன் அடையப் போகிறார்கள்.

நவக்கிரகத்தின் முக்கியமான கிரகமான சூரியன் ஜூன் 15ஆம் தேதி ராசியை மாற்றப் போகிறார். சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார்.

மிதுன ராசியில் சூரியனின் பெயர்ச்சி 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும்

மேலும் படிக்க | இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறவுள்ளது: மகாலட்சுமி யோகத்தால் அடிச்சது ஜாக்பாட் 

ரிஷபம் - ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரத்தால் சம்பளம் உயர வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை மேம்படும். முதலீடு செய்ய நினைக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

தொழில் மற்றும் முதலீடு செய்வதில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

கன்னி - இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இந்த ஒரு மாதம் பயணத்தின் போது மங்களகரமானதாக இருக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். மேலும் சம்பளம் உயரவும் வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் பதவி உயர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் பிம்பம் வலுவாக இருக்கும்.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு  வருமானம் அதிகரிக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு. பொருளாதார நிலை மேம்படும். புதிய வருமான வழிகள் தானாகவே உங்களிடம் வந்து சேரும்.

பல்வேறு ஆதாரங்களில் இருந்து ஆதாயம் அடைவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். புதிய வேலை தேடுட்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். அதே சமயம் வியாபாரத்திலும் தொழிலும் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கும் சாதகமான நேரம் இது. 

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுகிறது. இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்த மாதம் உங்களுக்கு சாதகமானதாக அமையும்.  

மேலும் படிக்க | நிறைவான செல்வம் பெற வேண்டுமா; குபேரர் அருளை பெற செய்ய வேண்டியவை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News