ஆகஸ்ட் 2022 சூரியன் புதன் பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்கள் வெவ்வேறு நேரங்களில் நடக்கும். கிரகங்களின் ராசி மாற்றத்துக்கான நேரம் அவற்றின் வேகத்தைப் பொறுத்ததாகும். அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கிரகங்களின் ராஜாவான சூரியனும், புத்திசாலித்தனத்தின் கிரகமாக கருதப்படும் கிரகமான புதனும் ஆகஸ்ட் மாதத்தில் ராசியை மாற்றவுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் கடக ராசியை விட்டு விலகி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரிய பகவான். அதாவது ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் தன்னுடைய சொந்த ராசியில் நுழையவுள்ளார். மறுபுறம், புதன் கிரகம் 22 ஆகஸ்ட் 2022 அன்று கன்னி ராசியில் நுழையவுள்ளார். கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். சூரியன் மற்றும் புதனின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் காணப்படும். இருப்பினும் குறிப்பிட்ட 3 ராசிகளில் சூரியன் மற்றும் புதனின் அருளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | இந்த வாரம் எப்படி இருக்கு? யாருக்கு சூப்பர், யாருக்கு சுமார்? வார ராசிபலன் இதோ 


சிம்மம்: 


ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் சிம்ம ராசியில் லக்ன ஸ்தானத்தில் கோச்சாரம் ஆவார். செல்வத்தின் கண்ணோட்டத்தில் இந்த ஸ்தானம் மிகவும் சிறப்பான ஸ்தானமாக கருதப்படுகிறது. சிம்மத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கிய பணத்தை திரும்ப பெறுவார்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம்.


கன்னி: 


கன்னி ராசியின் லக்ன வீட்டில் சூரியன் கோச்சாரம் ஆவதால், இவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் ஏற்படலாம். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணி இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். பணியிடத்தில் மேக் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.


மகரம்: 


கன்னி ராசியில் புதன் கோச்சாரம் செய்வது மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். முதலீடு செய்ய இது ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | சனியின் ‘வக்ர’ பெயர்ச்சியால் வெற்றியை ருசிக்க போகும் சில ராசிகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ