Budhan Asthamanam: கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ஜோதிட ரீதியாக இந்த பெயர்ச்சிகள் மிக முக்கிய நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. கிரகங்களின் ராசிகள் தவிர, அவற்றின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றன்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்துமே முக்கியமான ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றான. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் அஸ்தமனம்:


கிரகங்கள் சூரியனுக்கு அருகில் வரும்போது அஸ்தமனமாகின்றான. சூரியனிடமிருந்து விலகிச் செல்லும்போது உதயமாகின்றன. பொதுவாக கிரகங்களின் அஸ்தமனம் அவற்றை பலவீனமாக்குகின்றன. ஏப்ரல் 4, அதாவது இன்று புதன் கிரகம் அஸ்தமித்துள்ளது. மேஷ ராசியில் புதன் அஸ்தமனமாகியுள்ளது. முன்னதாக ஏப்ரல் 2 ஆம் தேதி, புதன் வக்ர பெயர்ச்சி அடைந்தது. வக்ர நிலையில் புதன் அஸ்தமனமாவது அனைவரின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி புதன் பெயர்ச்சியாகி மீன ராசியில் நுழையும். ஒரு வாரத்திற்குள் புதனின் நிலை மூன்று முறை மாறுவது ஒரு பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


புதன் அஸ்தமனத்தால் அட்டகாசமான பலன்களை அனுபவிக்கவுள்ள அதிர்ஷ்ட ராசிகள்:


மிதுனம் (Gemini): 


மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமனம் நல்ல பலன்களைத் தரும். மிதுன ராசிக்கு அதிபதி புதன். இந்த காலத்தில் சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் இப்போது நிறைவேறும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறலாம். தொழிலதிபர்களுக்கு நிதி ஆதாயம் ஏற்பட சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. சட்ட சிக்கல்களில் உங்களுக்கு ஆதரவாக முடிவு வரும். இதனால் பெரிய அளவிலான நிம்மதி கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.


மேலும் படிக்க | இன்னும் இரண்டே நாட்கள்... சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்


கன்னி (Virgo): 


கன்னி ராசியினருக்கு புதன் அஸ்தமன காலம் சிறப்பான காலமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் சில பெரிய சாதனைகளை நீங்கள் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மேம்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள் லாபம் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அமையும். உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.


மீனம் (Pisces):


மீன ராசிக்காரர்களுக்கு புதனின் அஸ்தமனம் மிகவும் சாதகமாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை மற்றும் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கி உங்கள் வேலைகள் வேகமாக முடிவடையும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் இப்போது கிடைக்கும். மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புதனின் இடப்பெயற்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ